செய்தி
 Photo
செங்கலடி தம்பதிகள் படுகொலை! மாணவர்கள் ஒழுக்கக்கேடுகள் தொடர்பாக கல்விப்பணிப்பாளர் கருத்து!
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 12:33.06 AM GMT ]
செங்கலடி மத்திய கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கக்கேடுகள் தொடர்பாக ஏற்கனவே தமது கவனத்திற்கு பல புகார்கள் கிடைத்துள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.

செங்கலடி நகர வர்ததகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் ஏறாவூர் பொலிஸாரால் சந்தேகத்தின பேரில் கைதாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த மாணவிக்கும் மாணவனொருவனுக்கும் இடையிலான காதல் தொடர்புகளின் பின்னணியிலேயே இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர்கள் ஒழுக்கக்கேடு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த மாதம் இந்த ஒழுக்கக்கேடுகள தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்கள் ஒழுக்கம் தொடர்பாக பாடசாலை நிருவாகத்தினருக்கு பல்வேறு உத்தவுகளைப் பிறப்பித்திருந்தேன்.

மாணவர்கள் விடும் ஒழுக்கக் கேடுகள் பற்றி சுடடிக்காட்டினாலும் பாடசாலை நிருவாகம் அதனை மூடி மறைப்பதற்கே முற்படுகிறது.

இதன் விளைவாகவே குறித்த கொலைச் சம்பவம் பலரும் கூறுவதை மறுக்க முடியாத நிலையே உள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் சந்தேக நபர்களாக காணப்படுவது தொடர்பான நிருவாக ரீதியான விசாரணைகள் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ஆசியர்கள் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பாடசாலை சமூகத்துடன் இதுபற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும்.

இந்த பாடசாலையைப் பொறுத்தவரை புதிய மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கமைய 7 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய அதிபர் உட்பட சகல ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்குவது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளரின் கவனத்திறகு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது என பதிலளித்தார்.

சந்தேகத்தின பேரில் கைதாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவி மற்றும் மாணவர்களின் புகைப்படங்கள்

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 30-11-2015, 08:51.12 AM ]
மாவீரர் தினத்தை யாழ்.குடாநாட்டில் விளக்கேற்றி அனுஸ்ட்டித்த சம்பவம் தொடர்பில் சிலர் யாழ். பொலிஸாரினால் அழைக்கப்பட்டு, கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
[ Monday, 30-11-2015, 08:41.43 AM ]
யாழ்.பண்ணைப் பகுதியில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் 7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன், இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொண்ட அதிரடித் தேடுதல் நடவடிக்கையின் மூலம் மேலும் 5 பேர் பருத்தித்துறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Monday, 30-11-2015, 08:32.31 AM ]
பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்டுவரும் விசாரணைகளில், சப்ரகமுவ மாகாணத்தின் பிரதான அரசியல்வாதி ஒருவரின் ஆலோசனையின்படி கடற்படையின் பிரிவு செயற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
[ Monday, 30-11-2015, 07:59.26 AM ]
இலங்கைக்கு எந்த விதமான இராணுவ ஆயுத உதவிகள் வழங்கப்படகூடாது என  பா.ம.க நிறுவனர் அன்பு மணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
[ Monday, 30-11-2015, 07:46.19 AM ]
அனைத்து தரப்பினருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அரசாக இத்தேசிய அரசாங்கம் காணப்படுகிறது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சரும் ஆளுங்கட்சி பிரதான அமைப்பாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
[ Monday, 30-11-2015 08:01:40 GMT ]
தீவிரவாத தாக்குதல்கள், அரசியல் கொந்தளிப்பு போன்றவைகள் காரணமாக எகிப்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் ஆள் ஆரவமின்றி களையிழந்து காணப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
[ Monday, 30-11-2015 07:07:42 GMT ]
அன்பார்ந்த ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு நற்பலன்கள் தரும் வாரமா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,
[ Monday, 30-11-2015 07:05:31 GMT ]
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
[ Monday, 30-11-2015 08:25:52 GMT ]
கண் புரை நோய் எனப்படுவது, கண்களில் உள்ள திரை அல்லது லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழப்பதால் கண்பார்வை குறைவதேயாகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-11-2015 05:30:17 ]
ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக் லேலன்ட் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வைகோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி.