செய்தி
என் உயிர் பிரிந்தால் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்: இயக்குநர் மணிவண்ணன்
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 06:30.11 AM GMT ]
என்னிடம் எதுவும் இல்லை. உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அவரது இயக்கத்தில் அமைதிப்படை இரண்டாம் பாகம் படம் தயாராகிறது. அதன் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அமைதிப் படை 2ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். உண்மைதான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.

 படத்தைப் பார்த்துவிட்டு தமது இயலாமையை வெளிப்படுத்த என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும் என்றார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 27-04-2015, 10:17.09 AM ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு பொருத்தமானதல்ல என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
[ Monday, 27-04-2015, 10:04.26 AM ]
சத்தியாகிரகம் செய்து 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டால், அது சிங்களவர்கள் மரணத்திற்கான பிடியாணையை நிறைவேற்றிக்கொண்டது போலாகும் என ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
[ Monday, 27-04-2015, 09:56.15 AM ]
வேறு ஒருவரின் கடவுச்சீட்டையும் வீசாவையும் பயன்படுத்தி டுபாய் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர் டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு திருப்பிய அனுப்பிய நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Monday, 27-04-2015, 09:27.12 AM ]
19வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதால் சத்தியாக்கிரக போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் அறிவித்துள்ளார்.
[ Monday, 27-04-2015, 09:26.16 AM ]
கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
[ Monday, 27-04-2015 07:59:42 GMT ]
ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியுஷுவில் உள்ள எரிமலைப் பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் ஈரமண்ணை கொண்டு மக்கள் மண் குளியல் போடுகின்றனர்.
[ Monday, 27-04-2015 08:42:58 GMT ]
திருவனந்தபுரத்தில் திருமணமாக இருந்த மணமகன் விபத்தில் சிக்கியதால் மருத்துவமனையிலேயே திருமணம் நடந்துள்ளது.
[ Monday, 27-04-2015 06:48:27 GMT ]
நடைபெற்று வரும் 8வது ஐபிஎல் தொடரில் முன்னணி வீரர்களாக கருதப்பட்ட யுவராஜ், தினேஷ் கார்த்திக் சொதப்பி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
[ Monday, 27-04-2015 07:27:26 GMT ]
கொழுப்பு அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 26-04-2015 12:09:47 ]
கடந்த ஒருவார காலமாகவே அரசியலில் அடுத்து என்ன நடக்குமென்ற கேள்வி மக்களை வெகுவாகக் குடைந்து கொண்டிருந்தது.