செய்தி
 Photo
முஸ்லிம்களைக் குறிவைக்கும் சிங்களவர்கள்! மீண்டும் வருகிறதா போர்?
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 01:53.34 AM GMT ] [ விகடன் ]

சிங்கள இனவாதம் மீண்டும் ஓர் உயிர் அழிப்புப் போருக்குத் தயாராகி வருகிறது. அதற்கு, எஞ்சியுள்ள தமிழர்களோடு குறிவைக்கப்பட்டுள்ளவர்கள் முஸ்லிம்கள் என்று அதிர வைக்கிறார் ஈழத்தில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர்.

இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசியவர்கள்,

இலங்கையில் 2012-ம் ஆண்டு தம்புள்ள, அநுராதபுரம், குருநாகல், தெதுறுஓயா, ராஜகிரிய ஒபேசேகரபுர, தெஹிவளை ஆகிய பள்ளி​வாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்த வருடம் 'ஹலால்’ முறையைத் தடைசெய்ய வேண்டும் என்று, சிங்கள புத்த பிக்குகள் முஸ்லிம்கள் மீதானத் தாக்குதலைத் தொடங்கினர்.

ஏப்ரல் 14-ம் தேதி வரவிருக்கும் சிங்களப் புது வருடத்துக்கு 'முஸ்லிம்கள் கடைகளில் துணிகளையும் பொருட்களையும் வாங்குவதை சிங்களவர்கள் தவிர்க்கவேண்டும்’ என, புத்த பிக்குகள் சொல்லிவந்த நிலையில், கடந்த 28-ம் தேதி இரவு பெப்பிலியான பகுதியில் உள்ள 'பேஷன் பக்’ என்ற முஸ்லிம் கடைக்குள் புகுந்து புத்த பிக்குகள் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர். அந்தக் காட்சிகள் கடையில் இருந்த கமராவில் பதிவாகியுள்ளன. ஆனால், அந்தப் பதிவு எந்தவொரு தொலைக்​காட்சிக்கோ, பத்திரிகைக்கோ செல்லக் கூடாது என்று அரசு எச்சரித்​துள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசு எப்படியான இனவாதத் தீயைப் பற்றவைத்து வருகிறது என்பதை அரசாங்கத்தோடு ஒன்றியுள்ள முஸ்லிம் அமைச்சரான ஹக்கீமின் பேச்சு உறுதிப்படுத்துகிறது.

அண்மையில் அவர் பேசும்போது, 'பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இனவாதத்தைத் தூண்டும் விதமாக, பொது பல சேனாவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பொது பல சேனாவோ, 'புத்த பிக்குகளின் இந்த இனவெறி மிகுந்த தாக்குதல்களுக்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களும் இலங்கையில் உள்ள முஸ்லிம்களும்தான் காரணம்’ என்று குற்றம் சாட்டுகிறது.

கடந்த வாரம், கிளிநொச்சி கந்தசாமி கோயில் எதிரே உள்ள சிறீதரன் எம்.பி. அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் புகுந்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களை மக்களே பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அவர்களைப் பொலிஸார் விடுவித்துவிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க வந்துள்ளனர்.

இந்த அலுவலகத்துக்கு மிக அருகில் சிங்கள இராணுவத்தின் படைத் தலைமையகம் இருந்தும் தாக்குதல் நடக்கிறது என்றால், அவர்கள் இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் உரிய ஆட்கள்தான்'' என்கிறார்கள்.

செப்டம்பர் மாதம் வடமாகாணத் தேர்தலை நடத்த வேண்டும் என பல நாடுகள் இலங்கையிடம் சொல்கிறது. ஆனால், இலங்கை அரசோ இப்படியான தாக்குதல்களைத் தொடுத்தால், இன்னும் தமிழ்ப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்று கூறி தேர்தலை நடத்த விடாமல் செய்யலாம் என்று நினைக்கிறது.

இப்படி ஜெனிவாவின் மனித உரிமைக் கூட்டத்தொடரின் போதும், அதன் பிறகும் அரசுக்கு ஆதரவான செயல்களும், அரசின் துணைகொண்டு நடக்கும் தாக்குதல்களும் ஏராளம்.

இலங்கை அரசுடனான உறவைப் பாதுகாக்கத் தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களை இந்திய அரசு ஒடுக்க வேண்டும் என்று, புத்த குழுக்கள் பேசுகின்றன.

தமிழகத்திலிருந்து இலங்கை வந்துள்ள அனைவரையும் நாடுகடத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் பேசியது கொந்தளிப்பைக் அதிகரித்து இருக்கிறது.

ராஜபக்சவோ, ''போர்க் குற்றத்துக்கு இலங்கை அரசுக்கும் இராணுவத்துக்கும் தண்டனை கொடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? என்கிறார்.

ஐ.நா-வும் உலக நாடுகளும் வெறும் தீர்மானத்தில் இலங்கையை எச்சரித்துக் கொண்டிருந்தால், முஸ்லிம்களை அழிப்பதற்கான இன்னொரு போர் மீண்டும் வெடிப்பதை உலகமே நினைத்தாலும் தடுக்க முடியாது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-04-2015, 04:25.46 AM ]
தான் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக வட,கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 18-04-2015, 04:05.15 AM ]
இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Saturday, 18-04-2015, 04:01.20 AM ]
பொருட்களின் நிறைகளை நுகர்வோர் சரியாக தெரிந்து கொளளும் வகையில் விசேட திட்டமொன்றை அமுல்படுத்த நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
[ Saturday, 18-04-2015, 02:38.45 AM ]
ஆந்திர போலீஸ் நடத்திய வெறியாட்டத்துக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் டெல்லியில் ஒன்று திரண்டுள்ளனர். ஆந்திர கொலைவெறிச் சம்பவத்தில் தப்பி வந்த சாட்சிகளை அங்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.
[ Saturday, 18-04-2015, 01:43.05 AM ]
19ம் திருத்தச் சட்டம் குறித்து மீண்டும் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
[ Friday, 17-04-2015 13:18:10 GMT ]
சீனாவில் பெண் ஒருவர் பன்றியை செல்லபிராணியாக வளர்த்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
[ Friday, 17-04-2015 13:34:51 GMT ]
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக்கில் தனது ஆபாச படங்கள் வெளியானதை பார்த்து அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
[ Friday, 17-04-2015 16:25:50 GMT ]
மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
[ Friday, 17-04-2015 13:38:39 GMT ]
பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 17-04-2015 07:03:52 ]
இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும் தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.