செய்தி
 Photo
தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா? வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்த மாணவர்கள்!
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 02:43.27 AM GMT ]
தனித் தமிழ் ஈழம் வேண்டும். அதற்கு உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத் தமிழ்ர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள் இந்திய அரசே.. மரணம் தான் முடிவா தமிழினத்திற்கு.. வாக்காளர் அடையாள அட்டை இனி எதற்கு என்ற பதாகை ஏந்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்கச் சென்று தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அங்கிருந்த அலுவலரிடம் கொடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் மீண்டும் அடுத்த வடிவம் பெறும். தனித் தமிழ் ஈழம் பெறும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது என்றனர் போராட்ட மாணவர்கள்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 05-07-2015, 07:24.44 AM ]

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

[ Sunday, 05-07-2015, 07:21.25 AM ]
நாட்டின் பயணத்தை மாற்றுவதாக ஜனாதிபதி தேர்தலின் போது தானும் ஜனாதிபதியும் அறிவித்ததாகவும், மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டதும் அதற்காகவெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 05-07-2015, 07:11.05 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தான் நல்ல உறவை பேணி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
[ Sunday, 05-07-2015, 07:10.24 AM ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 05-07-2015, 07:09.40 AM ]
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணை அறிக்கை எனக் கூறி, போலி அறிக்கை ஒன்றை மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார நடவடிக்கையோடு பகிரங்கப்படுத்த அவரது அணியினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
[ Sunday, 05-07-2015 00:15:22 GMT ]
சிரியா ராணுவத்தினரை சிறுவர்கள் படுகொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
[ Sunday, 05-07-2015 06:41:49 GMT ]
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் கை, கால்கள் செயலிழந்த மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
[ Sunday, 05-07-2015 07:27:30 GMT ]
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Sunday, 05-07-2015 06:31:15 GMT ]
அனைத்து வகையான வசதிகளும் உள்ளடக்கப்பட்டதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மாறியுள்ள நிலையில் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றினை பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 05-07-2015 01:45:50 ]
ஏழு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறார்.