செய்தி
 PhotoVideo
கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்!- பா.உ சரவணபவன், சி.சிறீதரன் நேரில் சென்று பார்வை
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:11.52 AM GMT ]
கிளிநொச்சி உதயன் பணிமனை மீதும் பணியாளர்கள் மீதும் காட்டு மிராண்டிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்று பேர் படுகாயம் உட்பட நான்குக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறீதரன் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிசாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயப்பட்டுள்ளவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி அலுவலகம் மீது தாக்குதல் இடம் பெற்று ஐந்தாவது நாள் அதிகாலை ஏழு பேர் கொண்ட குழுவினரால் முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு அலுவலகத்துள் புகுந்து மோசமான முறையில் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தாக்குதல்களால் கிளிநொச்சி பகுதி மக்கள் மத்தியிலும் அச்சமும், பதட்டமும் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தாக்குதல்கள் தொடருகின்ற போதிலும் தாக்குதலாளிகள் எவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது தாக்குதலாளிகளுக்கு துணிவை ஏற்படுத்துவதாக அமைகின்றது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 07-07-2015, 06:21.05 AM ]

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 07-07-2015, 06:01.50 AM ]
தன்னை பொது செயலாளர் பதிவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 07-07-2015, 05:41.37 AM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[ Tuesday, 07-07-2015, 05:04.59 AM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனு தயாரிக்கும் போது மஹிந்தவுக்காக செயற்பட்டவர்களை நீக்கி விட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருங்கியவர்களின் பெயர்களை நிரப்புவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Tuesday, 07-07-2015, 05:02.08 AM ]
எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி கூடுதலான உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் புதிய அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க முடியும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 07-07-2015 00:24:56 GMT ]
லிபியாவில் மிகவும் தாழ்வாக பறந்த போர் விமானத்தில் இருந்து மனிதர் ஒருவர் உயிர் தப்பிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 07-07-2015 05:47:13 GMT ]
இந்தியாவில் வறுமையை போக்க கொள்கை சீர்திருத்தம் மற்றும் 8 முதல் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி அவசியம் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
[ Tuesday, 07-07-2015 06:04:11 GMT ]
ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதற்காக ரஹானே தலைமையிலான இந்திய அணி இன்று ஜிம்பாப்வே புறப்பட்டு செல்கிறது.
[ Monday, 06-07-2015 15:31:09 GMT ]
கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 07-07-2015 03:07:19 ]
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பொதுத் தேர்தலுக்காக, வாக்கு வேட்டைக்காக கிழக்கு முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக எடுத்து விடப்பட்ட அடுத்த கட்ட நகர்வுதான் “கிழக்கில் தனியான நிர்வாக அலகு” என்ற தேர்தல் குண்டாகும்.