செய்தி
கோல்டன் கீ வைப்பாளர்களின் பணத்தை உடனடியாக செலுத்துமாறு உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 01:38.16 AM GMT ]
கோல்டன் கீ வைப்பாளர்களின் பணத்தை உடனடியாக செலத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செலிங்கோ குழும நிறுவனத்தின் கோல்டன் கீ நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைந்ததன் காரணமாக அதில் பணத்தை முதலீடு  செய்த பெரும் எண்ணிக்கையான வைப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணிப்பாளர் சபையின் சொத்துக்களை விற்பனை செய்து அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு நவாரணம் வழங்குமாறு மத்திய வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக செலிங்கோ குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொதலாவல மற்றும் அவரது மனைவியின் சகல சொத்துக்களையும் முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு ஜூன் மாதம் கோல்டன் கீ நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைந்தது.

குறித்த நிறுவனம் வங்குரோத்து அடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்து அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு சொந்தமான சகல சொத்துக்களையும் முடக்கி, பாதிக்கப்பட்டோருக்கு நலன்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

கோல்டன் கீ நிறுவனத்தில் ஒன்பது பணிப்பாளர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கோல்டன் கீ நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர்களை நியமித்து மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்களின் மொத்தப் பணப் பெறுமதி 9179 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 02-06-2015, 07:08.09 AM ]
சிரிலிய சவிய வங்கி கணக்கினை இடைநீக்கம் செய்தமையினால், அவ் அமைப்பில் உதவி பெற்றுக்கொண்டிருந்த மூவர் தற்போது வரையில் உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபகச் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 02-06-2015, 06:13.38 AM ]
புத்தளத்தில் 06 வயது சிறுமியை கடத்தி காட்டுக்குள் வைத்திருந்த சந்தேக நபரை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
[ Tuesday, 02-06-2015, 06:01.56 AM ]
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் குடும்பங்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளன.
[ Tuesday, 02-06-2015, 06:00.30 AM ]
புங்குடுதீவில் மாணவி வித்தியாவை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும் என அவரின் தாயார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
[ Tuesday, 02-06-2015, 05:40.01 AM ]
அர்ஜுன் மகேந்திரன் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கையொப்பமிடும் பணம் செல்லுபடியாகுமா என்பது குறித்து சந்தேகம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 02-06-2015 00:35:59 GMT ]
தென் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்காவை பெண் ஒருவர் சுற்றிப்பார்த்துகொண்டு இருந்துபோது திறந்திருந்த காரின் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்த சிங்கம் அவரை கடித்து சாகடித்தது.
[ Tuesday, 02-06-2015 05:47:34 GMT ]
காஷ்மீர் மற்றும் குஜராத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர் மோடி என்று பாகிஸ்தானைச் சேர்ந்த ஐமாத் இ இஸ்லாமி கட்சி தலைவர் சிராஜுல் ஹக் கூறியுள்ளார்.
[ Tuesday, 02-06-2015 06:39:27 GMT ]
இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் மோதப் போகும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5-0 என ஒயிட் வாஷ் ஆகும் என முன்னாள் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.
[ Tuesday, 02-06-2015 06:14:35 GMT ]
சீரான தூக்கம் ஞாபகசக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்குவகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 02-06-2015 00:47:45 ] []
கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது.