செய்தி
ராகுல் காந்தியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு! பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் இருந்து மாற்ற கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:07.35 AM GMT ]
கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் வாசன் சந்தித்து பேசினார். அதன்போது, வாசன் ராகுல் காந்தியிடம், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

வாசனின் இந்த கருத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜீ.கே.வாசன் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போதும் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாக கூறினார்.

இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் வாசன் சந்தித்து பேசினார். இதனால் வாசன் தனிக்கட்சி தொடங்க தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

அவரது எம்.பி. பதவி காலம் விரைவில் முடிவடைவதால் அவர் தனிக்கட்சி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் வாசன் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தனிக்கட்சி தொடர்பாக எழுந்துள்ள வதந்திகள் பற்றி ராகுல் காந்தியிடம் வாசன் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிராக வீசும் அலை பற்றியும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

ராகுலுடன் நடந்த சந்திப்பு பற்றி வாசனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அப்போது அவரது பல்வேறு சந்தேகங்களுக்கு நான் தெளிவான விளக்கம் அளித்தேன். நான் சொன்னவற்றை அவர் கனிவோடு கேட்டார் என்றார்.

அவர்களது பேச்சில் இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைபாடுதான் முக்கிய அம்சமாக இருந்ததாக தெரிகிறது.

இலங்கை பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிராக எழுந்துள்ள மிகப்பெரிய எழுச்சி பற்றியும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

வாசன் ராகுல்காந்தியிடம் பேசும்போது, இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நீக்கம் பற்றியும் அவர்கள் பேசியதாக தெரிகிறது.

இதற்கிடையே வெளிநாட்டுக்கு சென்றுள்ள சோனியா விரைவில் டெல்லி திரும்பியதும் அவரையும் சந்தித்து பேச வாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பிறகே வாசன் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான சர்ச்சைகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 27-04-2015, 02:08.30 PM ]
அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சி இன்று 8 புதிய திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளது.
[ Monday, 27-04-2015, 01:44.57 PM ]
யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் வைத்து கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
[ Monday, 27-04-2015, 01:38.42 PM ]
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட பிக்குமாரை குற்றவாளி கூண்டிலில் ஏறுமாறு உத்தரவிட்ட கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த சில்வா, இந்த பிக்குமாருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
[ Monday, 27-04-2015, 01:20.01 PM ]
2009ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூர் நகரத்தில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
[ Monday, 27-04-2015, 12:19.01 PM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பில்லாதவர்கள் இருப்பதாகவும் அந்த கட்சியை சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோரை விவாதத்திற்கு வருமாறு அழைப்பதாகவும் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
[ Monday, 27-04-2015 14:59:10 GMT ]
மின்பொருள் கடை ஒன்றில் புகுந்த பெண் ஒருவர் அங்குள்ள பொருட்களை திருடி ஆடைக்குள் மறைத்த வியப்பூட்டும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
[ Monday, 27-04-2015 11:07:46 GMT ]
நேபாளத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த துணை நடிகர் ஒருவர் பலியாகியதாக தகவல்கள் வெளியாகியாகியுள்ளது.
[ Monday, 27-04-2015 15:12:18 GMT ]
பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Monday, 27-04-2015 15:17:35 GMT ]
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 26-04-2015 12:09:47 ]
கடந்த ஒருவார காலமாகவே அரசியலில் அடுத்து என்ன நடக்குமென்ற கேள்வி மக்களை வெகுவாகக் குடைந்து கொண்டிருந்தது.