செய்தி
இலங்கையை இந்தியா இழந்து போனது ஏன்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 12:24.55 PM GMT ]
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த்தால், சீனாவுடன் நெருங்கப் போகிறது, பாகிஸ்தானுடன் நெருங்கப் போகிறது என்று இந்தியாவின் பெரும்பாலான தேசியவாத ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.

ஜெனிவா கூட்டத்தொடர் முடிந்து இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையிலும், இந்திய மத்திய அரசின் மீதான இத்தகைய விமர்சனங்கள் மட்டும் ஓயவில்லை.

தெற்காசியாவின் மிகப்பெரிய வல்லரசு என்றோ மனித உரிமைகள் விடயத்தில் அதற்குள்ள கடப்பாடுகள் பற்றியோ, இந்தியாவுக்குள்ள தார்மீகப் பொறுப்புணர்வு குறித்தோ, அல்லது இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஆறு கோடி தமிழர்களினது உணர்வுகள் பற்றியோ இந்த ஊடகங்களுக்கு கவலையில்லை.

அவற்றின் ஒட்டுமொத்த கவலையும் கரிசனையும் சீனா மட்டும் தான்.

இலங்கையை எதிர்த்து நின்றால் எங்கே சீனா அதனைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு போய் விடுமோ என்ற அச்சத்தை தான் அவை வெளிப்படுத்துகின்றன.

ஒரு உண்மை என்னவென்றால் இலங்கையை சீனா எப்போதோ தன் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டது என்பது தான்.

இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்தம் செய்தால் சீனா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடும் என்று மத்திய அரசு சாக்குப்போக்கு சொல்கிறது.

ஆனால் இப்போதும் இலங்கையில் தான் சீனா அமர்ந்துள்ளது. அதைத் தடுப்பதற்கு இந்தியாவால் முடிந்த்தா? என்று கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தர் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சின்ஹா.

இப்போது இலங்கை விவகாரத்தில் இந்தியா எதையும் செய்ய முடியாதளவுக்குப் பலவீனப்பட்டு நிற்கிறது என்பதே சரியான கணிப்பு.

இதனை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவால் எதையும் செய்ய முடியாது. இலங்கையில் நீடித்து நிலைக்க்க் கூடிய அமைதியையும் அதிகாரப் பகர்வையும் கொண்டு வருவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா இப்போது இலங்கையுடன் நெருங்கவும் முடியாத அதேவேளை இலங்கையைக் கொண்டு காரியம் சாதிக்கவும் முடியாத இக்கட்டான நிலை ஒன்றுக்குள் தள்ளப்பட்டு நிற்கிறது.

இது ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த்தன் விளைவாக பொதுப்படையாக கருதப்பட்டாலும் அது சரியான கருத்தாகத் தெரியவில்லை.

ஜெனிவா தீர்மான விடயத்தில் இந்தியா தவறான, அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளதாக விமர்சிக்கும் இந்தியாவின் தேசியவாத ஊடகங்கள் ஒரு விடயத்தை மறந்துபோய் விட்டன.

அது என்னவென்றால் சீனாவை இலங்கைக்குள் கால் வைக்க இடமளித்த்து இந்தியாதான் என்பதே அது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அமைப்பதற்கு முதலில் இந்தியாவின் உதவியைத்தான் இலங்கை கோரியது.

அது வர்த்தக ரீதியாக பயனற்றது என்று இந்தியா ஒதுக்கித் தள்ளிவிட்டது.

இந்தியா அவ்வாறு எடுத்த முடிவுக்கு காரணம் தனது பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டே என்று இந்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தான் கைவிட்டால் அதனை இன்னொரு நாட்டைக் கொண்டு இலங்கை நிறைவேற்றும் என்பதை இந்தியா அப்போது ஊகிக்கத் தவறிவிட்டது.

அப்போது எந்தவொரு இந்திய தேசிய ஊடகமும் இலங்கையின் கோரிக்கையை நிராகரிப்பது இந்தியாவுக்கு ஆபத்தான சக்திகள் அந்த இடைவெளிக்குள் நுழைய வாய்ப்பை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்கவோ ஆலோசனை கூறவோ தவறிவிட்டன.

எப்போது அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை சீனா தன் கைக்குள் போட்டுக் கொண்டதோ அப்போதே அதன் முழுமையான ஆதிக்கத்துக்குள் இலங்கை வந்துவிட்டது என்பதே உண்மை.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் வழியாக உள்ளே நுழைந்த சீனா இப்போது காலை நீட்டி நிமர்த்தி இந்தியாவை இடிக்கிறது.

உண்மை இப்படியிருக்க ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க எடுக்கப்பட்ட முடிவு தான் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் தலைதூக்குவதற்குக் காரணம் என்பதுபோல இந்தியாவின் தேசியவாத ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா எடுத்த முடிவுக்கும் இலங்கை – சீனா நெருக்கத்துக்கும் அவ்வளவான தொடர்புகள் இல்லை.

இலங்கையில் சீன விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.

இன்றைய நிலையில் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளது போல இலங்கையில் அரசியல் தீர்வையோ அதிகாரப் பகிர்வையோ இந்தியாவினால் ஏற்படுத்தவே முடியாது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் அதிகாரப்பகிர்வு 13வது திருத்த்த்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தியா எத்தனை முறையோ வலியுறுத்திக் களைத்தே போய்விட்டது.

ஆனால் இலங்கை மட்டும் எதற்கும் மசிந்து கொடுக்கவேயில்லை.

இந்தியாவினால் என்னதான் செய்துவிட முடியும் என்பது போல நடந்து கொள்கிறது.

நாங்களும் தான் இலங்கையின் அமைச்சர்கள் அதிகாரிகளைச் சந்திக்கும் போதெல்லாம் 13வது திருத்த்த்தை நடைமுறைப்படுத்தும்படியும் அரசியல் தீர்வை வழங்கும் படியும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அவர்கள் எதற்கும் இணங்குகிறார்களில்லை. இதற்கு மேல் இந்தியா என்ன செய்வது? என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பகிரங்கமாகவே புலம்புகின்றார்.

இந்தநிலை ஒன்றும் ஜெனிவா தீர்மானத்தினால் வந்த்தில்லை. ஏன் சீனாவினால் கூட வந்த்தில்லை.

இந்தியாவின் தவறான கணிப்பினால் தவறான வெளிவிவகாரக் கோட்பாட்டினால்தான் இந்தநிலை ஏற்பட்டது.

இனிமேலும் கூட இந்தியாவினால் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு விட முடியாது.

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் கூட இந்தநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்காது.

ஏனென்றால் இவற்றுக்கு இடையில் நேரடித் தொடர்பில்லை.

இந்தியாவின் இரண்டும் கெட்ட வெளிவிவகாரக் கொள்கை அயல் நாடுகளிடையே அதன் செல்வாக்கை, ஆதிக்கத்தை பலவீனப்படுத்தி வட்டது.

புதுடில்லியில் நிலையானதும் உறுதியானதுமான அரசு ஒன்று மட்டுமன்றி, சக்திவாய்ந்த தலைமைத்துவம் ஒன்றும் உருவாகாதவரை, இந்தியா இழந்துபோன இந்த நிலையை மீள அடைவது சிரம்மான காரியமே.

ஹரிகரன்

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 30-03-2015, 03:24.33 AM ]
கட்சித் தாவும் நிலைக்கு என்னைத் தள்ளிவிட வேண்டாம் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிடம் கோரியுள்ளார்.
[ Monday, 30-03-2015, 03:19.42 AM ]
இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவசரப்பட வேண்டியதில்லை என சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
[ Monday, 30-03-2015, 03:00.55 AM ]
தேர்தல் முறைமைமாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
[ Monday, 30-03-2015, 02:45.50 AM ]
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமாக உள்ளன என சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.
[ Monday, 30-03-2015, 02:37.46 AM ]
2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் எதிர்நோக்கவுள்ள சவால்களை சமாளிக்க வேண்டுமாயின், இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015 14:55:52 GMT ]
ஜேர்மன் விங்ஸ் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இடைக்கால உதவித்தொகையை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Sunday, 29-03-2015 13:25:46 GMT ]
உத்தரப்பிரதேசத்தில் தும்பிக்கை போன்ற உடலமைப்புடன் பிறந்த பெண் குழந்தையை, விநாயகரின் மறுபிறவி என்று எண்ணி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.
[ Monday, 30-03-2015 02:44:58 GMT ]
2015ம் ஆண்டுக்காக உலகக் கிண்ணத்தை வென்று அவுஸ்திரேலியா அணி ஐந்தாவது தடவையாகவும் சம்பியனாகியுள்ளது.
[ Monday, 30-03-2015 01:34:39 GMT ]
Microsoft நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் Windows இயங்குதளத்தில் கணனியிலுள்ள தரவுகளின் பாதுகாப்பிற்கென கடவுச் சொற்களை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளமை அறிந்ததே.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 06:35:37 ]
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை, இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சி குறித்து, இந்தியன் எக்ஸ்பிரசிடம் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், யாரோ குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று பொதுவான கருத்தை கூறியிருந்தார்.