செய்தி
மருதானை விபச்சார விடுதியொன்றில் மட்டக்களப்பை சேர்ந்த பெண்கள் கைது! அதிர்ச்சித் தகவல்!
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 11:35.53 PM GMT ]
கொழும்பு, மருதானைப் பகுதியில் புதன்கிழமை விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டபோது கைது செய்யப்பட்ட பெண்களில் அதிகமானோர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் வேலைக்கு செல்கின்றோம் என்று சென்றவர்களே இவ்வாறு விபச்சாரத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானையில் உள்ள வீடு ஒன்றை நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற்று குற்றச் செயல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான பொலிஸார் சோதனை செய்த போது 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் ஒருவர் கர்ப்பிணி. கணவர் இவரை கைவிட்டு சென்று விட்டார். நிதித் தேவைகள், வாழ்வாதாரம் போன்றவற்றை நிறைவு செய்கின்றமைக்காக இப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கைதானவர்களில் அநேகர் 24 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். களுவாஞ்சிக்குடி, ஏறாவூர் போன்ற இடங்களை சேர்ந்தவர்கள். ஒருவர் ஜாஎலவை சேர்ந்தவர்.

இவர்கள் அனைவரும் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர். இந்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்துக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு செல்வதானது வேதனைக்குரியமாகவுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 03-05-2015, 12:58.26 PM ]
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தினர் என்ற குற்றச்சாட்டில் கைதான இருவருக்குப் பிணை வழங்க மறுப்புத் தெரிவிக்காத யாழ். பொலிஸ் நிலையப் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
[ Sunday, 03-05-2015, 12:36.35 PM ]
இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் கடந்த 10 வருடமாக வெள்ளவத்தையில் ஒவ்வொரு வருடமும் கம்பன் விழா நடைபெற்று வருகின்றது.
[ Sunday, 03-05-2015, 12:22.09 PM ]
பொதுத் தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு தலைவர் ரவி வைத்தியலங்காரவிற்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 03-05-2015, 12:14.11 PM ]
கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை புனைந்தமை தொடர்பில், லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய சேபால ரத்நாயக்கவை கண்டுபிடிக்க சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
[ Sunday, 03-05-2015, 12:10.36 PM ]
ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலாரத்ன தேரருடன் கூட்டணியை ஏற்படுத்த இணங்கியிருப்பதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Sunday, 03-05-2015 11:27:25 GMT ]
ஏமன் உள்நாட்டு யுத்தத்தில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான அமெரிக்க குடிமக்களை மீட்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
[ Sunday, 03-05-2015 09:10:24 GMT ]
திருவண்ணாமலையில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
[ Sunday, 03-05-2015 10:35:42 GMT ]
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 3 விக்கெட் இழந்து 172 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
[ Sunday, 03-05-2015 12:20:28 GMT ]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலுக்கும் ஆரோக்கியம் தருவது கீரைவகைகள் தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 02-05-2015 14:45:01 ]
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலங்களில், முன்னைய ஜனாதிபதி ராஜபக்ச தேர்தலில் வெற்றி கொள்வதன் மூலமே, ஈழத்தமிழ் மக்களாகிய நாம், சர்வதேச சமுதாயத்தின், விசேடமாக இந்தியாவின் ஆதரவுடன் நமது அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ளலாம் என எண்ணிய சிலரில் நானும் ஓருவன்.