செய்தி
தமிழ் இளைஞர் மீது இலங்கை இராணுவத்தினர் காடைத்தனமான தாக்குதல்! பரந்தனில் சம்பவம்
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 02:56.52 AM GMT ]
சிங்கள இளைஞனுக்காக தமிழ் இளைஞர் ஒருவரை இலங்கை இராணுவத்தினர் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் 160ம் கட்டை பரந்தன் பகுதியைச் சேர்ந்த ச.பிரகாஷ் (வயது 27) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பரந்தன் பகுதியில் சிங்கள இளைஞர் ஒருவருக்கும் தமிழ் இளைஞர் ஒருவருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக சிங்கள இளைஞர் அருகிலுள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிதுள்ளார்.

இதன்பின்னர் அங்கு வந்த இராணுவத்தினர் அவரது கையை பின்னால் கட்டி வைத்து பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.

ஆயினும் பொது மக்கள் ஒன்று கூடவே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

படுகாயமடைந்த இளைஞரை பொது மக்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 06-05-2015, 11:16.58 AM ]
பெரிய பிசாசை விரட்டிய தமக்கு தட்டை காலால் எட்டி உதைப்பது ஒன்றும் சிரமமான பணியல்ல என்பதை தினேஷ், விமல், வாசு போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தம்பர அமில தேரர் கூறியுள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 10:45.47 AM ]
அரசாங்கத்தின் தற்போதைய பிரதமர் புண்ணியத்திற்கு பிரதமரானவர் எனக் கூறிய அமைச்சர் டிலான் பெரேராவே அமைச்சர் பதவியை புண்ணியமாக பெற்றுள்ளார் என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 10:30.52 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பானது வரலாற்றில் மிக சிறந்த கேலி என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 10:27.00 AM ]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுக்கள் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ Wednesday, 06-05-2015, 10:18.39 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் சந்தித்து நடத்தும் பேச்சுவார்த்தையை, ரணிலை விரட்டியடிக்கும் ஒரு முயற்சி என்று ஸ்ரீலசுக பேச்சாளர் டிலன் பெரேரா தெரிவித்திருந்தார்.
[ Wednesday, 06-05-2015 06:54:17 GMT ]
கணவன்- மனைவி உறவு குறித்து மலேசிய இஸ்லாமிய தலைவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 06-05-2015 06:46:17 GMT ]
மாணவர்கள் பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற புதிய தந்திரத்தை மேற்கொண்டுள்ளனர்.
[ Wednesday, 06-05-2015 08:18:14 GMT ]
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான குமார் சங்கக்காரா, அவுஸ்திரேலிய உள்ளூர் அணியான ஹார்பட் ஹரிக்கன்ஸில் விளையாட 2 வருடங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
[ Wednesday, 06-05-2015 03:23:51 GMT ]
ஸ்மார்ட் கைக்கடிகாரம் போன்ற சாதனங்களுக்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளமே Android Wear ஆகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 06-05-2015 08:31:51 ] []
ஐக்கியமானதும் சமாதானமானதுமான இலங்கையே தமது தொலைநோக்கு என்று தமிழ் தலைவர்கள் தெரிவித்திருப்பதை கேட்கக்கூடியதாக இருந்தமை ஆர்வமான விடயமாக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கருத்து கூறியிருக்கின்றார்.