செய்தி
இந்தோனேசிய படகு விபத்தில் பலியான இலங்கையர் விபரங்கள் அறிவிப்பு!
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 12:14.43 AM GMT ]
இந்தோனேசிய படகு விபத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் விபரங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களைக் கண்டறிவதற்கு பொது மக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த அல்பிரட் பன்ங் அன் செலானின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

திவ்யா ஒன்றரை வயது பெண் குழந்தை, ரொனால்ட் 33 வயது ஆண், இன்ஜா 7வயது பெண் குழந்தை, டனிசன் 5 வயது ஆண் குழந்தை இவர்களது சடலங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதுடன், இவர்களது உறவினர்கள் உடனடியாக வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

20 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லையென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு கொன்சியூலர் பிரிவு இல, 14 சார் பாரன் ஜயதிலக மாவத்தை கொழும்பு 1 என்ற முகவரிக்கோ அல்லது 0112437635 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 0112473899 என்ற தொலைநகல் இலக்கத்துடனோ அல்லது consular@sltnet.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ விபரங்களை அறிந்துகொள்ள முடியுமென்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜவாகி சியான்ஜர் கடற்பரப்பில் கடந்த ஜூலை 23ம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் விபரங்களையே வெளிவிவகார அமைச்சு இவ்வாறு வெளியிட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 27-05-2015, 06:31.58 PM ]
வித்தியாவின் படுகொலையானது ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்றிருந்தால் யாழ்ப்பாணம் புங்குடு தீவுடன் மாத்திரம் நின்றிருக்கும் என கல்முனை வலய தமிழ்ப்பிரிவிற்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் கே.வரதராஜன் தெரிவித்தார்.
[ Wednesday, 27-05-2015, 05:33.09 PM ]
தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க போர் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வரவேற்பதாகவும் போர் நடைபெற்ற நேரத்தில் இராணுவ தளபதியாக பணியாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார்.
[ Wednesday, 27-05-2015, 05:26.16 PM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 27-05-2015, 05:13.12 PM ]
நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்டுள்ள இலங்கையரை மீட்கும் நடவடிக்கையில் தம்மால் இயன்றவற்றை செய்வதற்கு தயார் என்று நைஜீரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 27-05-2015, 04:48.34 PM ]
இரண்டு நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு பிரச்சினைக்கு தீர்வை கொண்டு வராது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
[ Wednesday, 27-05-2015 14:25:26 GMT ]
நியூயோர்க்கில் டவுண் சிண்ட்ரோம் என்ற குறைபாடுடைய இளம் காதலர்கள் டேட்டிங் செல்லும் வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது.
[ Wednesday, 27-05-2015 13:50:42 GMT ]
சேலத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதால், காதலன் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
[ Wednesday, 27-05-2015 13:51:08 GMT ]
மும்பை அணியின் வெற்றி கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என அந்த அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 27-05-2015 14:41:38 GMT ]
நரையால் பாதிக்கப்படும்போது ஆண்களும், பெண்களும் தலைக்கு சாயம் பூசுகிறோம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 26-05-2015 20:27:31 ]
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல திருப்பு முனைகள், கைதுகள், விசாரணைகள் என்று நடந்திருந்தாலும், நாடு பழமையை, பழைய சிந்தனையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.