செய்தி
(2ம் இணைப்பு)
Photo
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் - வடக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும்: ஐ.தே.க
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 02:58.31 AM GMT ]
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.

கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் வட மாகண சபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் - ஜனநாயக ஜக்கிய முன்னனி எனும் கட்சியினாலேயே இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடியலுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் மறைந்த ஈழ தமிழர் தந்தை செல்வாவின் வழியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்  இரட்டை இலை  சின்னத்தில் போட்டியிடுவதாக குறித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும்: ஐ.தே.க

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சியமாக வெற்றி பெறும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் பதவியை பெறும் நோக்கத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

அடுத்து நடைபெறவுள்ள பிரதான தேர்தலில் அரசியலில் ஈடுபடுவதற்கு தேவையான பின்னணியை கட்டியெழுப்புவதற்காகவே அங்கு தேர்தலில் போட்டியிடுகிறோம்.

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த பிரதேசத்தில் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு தேவையான கீழ் மட்டத்திலான அமைப்புகளை வலுப்படுத்த உள்ளோம்.

அதற்கு தகுதியான பிரதிநிதிகளை பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்

அதுவேளை வடக்கு தவிர்ந்த ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிடும் வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கம் ஆச்சரியமடையும் வகையிலான தேர்தல் முடிவுகளை எமது கட்சி பெறும் என்றார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 26-01-2015, 12:09.51 PM ]
இன்று மலையகத்தில் புதிய மாற்றங்களை உள்வாங்கவும், உருவாக்கவும் மலையக சமூகம் தயாராகியுள்ளது. மக்களின் வாழ்வியல் புத்தெழுச்சி பெறவேண்டும் என்றும், புதிய எதிர்பார்ப்புகளும், தேவைகளும் அதிகளவு இனங்காணப்பட்டு வருகின்றன
[ Monday, 26-01-2015, 12:06.12 PM ]
உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சில பாடங்களில் 35 புள்ளிகளுக்கும் குறைவான புள்ளிகளை பெற்ற மாணவர்களையும் கடந்த காலங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக காட்டியுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
[ Monday, 26-01-2015, 12:01.37 PM ]
பல்வேறு ஊடகங்கள் மற்றும் நபர்கள் தமக்கு எதிராக விமர்சனங்களையும் சேறுபூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நாட்டில் இருந்து வெளியேறும் எந்த எதிர்பார்ப்பையும் தான் கொண்டிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Monday, 26-01-2015, 11:52.40 AM ]
தமிழ் நாட்டின் மதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்து இளைஞர் சேனா அங்குரார்பண நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.
[ Monday, 26-01-2015, 11:45.13 AM ]
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உத்தியோபூர்வ பயணம் மேற்கொண்டு ஐரோப்பா சென்றுள்ளதால், பதில் வெளிவிவகார அமைச்சராக பதில் வெளிவிவகார அமைச்சராக பிரதியமைச்சர் அஜித். பீ. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Monday, 26-01-2015 10:11:26 GMT ]
அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த 2015ம் ஆண்டுக்கான மிஸ்.யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயது அழகி பாலினா வேகா பட்டம் வென்றுள்ளார்.
[ Monday, 26-01-2015 08:12:42 GMT ]
கரூர் மாவட்டத்தில் 27 வயது விதவை ஆசிரியையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஒரு குழந்தையை கொடுத்த 20 வயது மாணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.
[ Monday, 26-01-2015 07:00:07 GMT ]
ஐபிஎல் சூதாட்ட பிரச்சனை குறித்து வாய் திறந்து பேசியுள்ளார் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி.
[ Monday, 26-01-2015 07:41:38 GMT ]
இயற்கை நமக்கு கொடுத்துள்ள உணவுகளால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 25-01-2015 05:21:38 ]
அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை.