செய்தி
(2ம் இணைப்பு)
 
பொதுநலவாய மாநாட்டை எந்த நாடும் புறக்கணிக்காது- 15 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் ஆய்வு
[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 02:47.29 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டுகக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உகு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உகு, இந்த முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்.

எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என்று தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு, இந்த மாநாட்டை கனடா புறக்கணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.

எனினும் கனடாவும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாடு: 15 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் ஆய்வு

இலங்கையில் எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்த கனடா உட்பட 15 நாடுகளின் பிரதிநிதிகள் பலர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் தங்கியுள்ளனர்.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லை என கனடா அறிவித்துள்ள நிலையிலும் அந்த நாட்டின் பிரதிநிதி ஒருவர் இலங்கை வந்திருப்பது சிறப்பம்சம் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்று தினங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்த வெளிநாட்டு பிரதிநிதிகள், இலங்கையின் பாதுகாப்பு நிலைமை, போக்குவரத்து, தங்குமிட வசதிகள் தொடர்பில் ஆராயந்துள்ளனர்.

இவர்கள் இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளனர். அதேவேளை மேலும் ஒரு வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை செல்ல உள்ளது.

இவர்களும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பான ஏற்பாட்டு விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 31-08-2014, 10:05.04 AM ]
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து நவநீதம்பிள்ளை இன்று (31ஆம் தேதி) ஓய்வு பெறுகிறார்.

[ Sunday, 31-08-2014, 09:41.55 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு கண்டி மேல் நாட்டு சிங்கள பெண்ணை மணம் முடித்து வைக்க மகிந்தவும் அவரது மனைவியான ஷிரந்தி ராஜபக்சவும் தீர்மானித்துள்ளனர்.
[ Sunday, 31-08-2014, 09:12.53 AM ]
ஊவா மாகாணத்தின் எதிர்கால முதலமைச்சர் நீங்கள் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தன்னை வாழ்த்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
[ Sunday, 31-08-2014, 08:49.02 AM ]
கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக இலங்கை அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி கொடுக்கும் ஒரு மனி­த­ராக இலங்கை அர­சாங்­கத்­தினால் அதி­க­ளவில் வெறுக்­கப்­பட்ட ஒரு மனி­த­ராக இருந்து வந்த நவ­நீ­தம்­பிள்ளை, இன்­றுடன் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பத­வியில் இருந்து நீங்கப் போகிறார்.
[ Sunday, 31-08-2014, 08:40.29 AM ]
அமைச்சர் சுமேதா ஜயசேன, தனக்கு எதிராக அரசியல் சதி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் அழுது புலம்பியுள்ளார்.
[ Sunday, 31-08-2014 08:37:57 GMT ]
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் அந்த அமைப்பின் அடுத்த இலக்கு என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
[ Sunday, 31-08-2014 06:40:17 GMT ]
சென்னையில் கூவத்தில் குதித்து தற்கொலை செய்யச் சென்ற கணவரைக் காப்பாற்ற சென்ற மனைவியும் சேற்றில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 31-08-2014 07:28:56 GMT ]
இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் கோஹ்லியும், இங்கிலாந்து வீரர் ஸ்டோக்சும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
[ Sunday, 31-08-2014 06:21:31 GMT ]
நடுத்தர வயது ஆண்களுக்கு தோல் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உடல் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
[ Sunday, 31-08-2014 02:20:35 GMT ]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் சிவகார்த்திகேயன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 31-08-2014 03:51:00 ]
காணாமற்போனோர் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும் விசாரிக்கவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள இந்திய மனிதஉரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷால், இப்போது ஊடகங்களில் அதிகம் சர்சசைக்குரிய நபராக மாறியுள்ளார்.