செய்தி
லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்! சந்தேகமான இருவர் கைது
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 03:26.17 AM GMT ]
நேற்று லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, இடையில் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

இதுகுறித்து தெரியவருவதாவது,

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏ 330  என்ற இலக்கமுடைய விமானம் கொழும்பில் இருந்து நேற்று 267 பயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கி புறப்பட்டது.

இந்தநிலையில் அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, விமானம் அவசரமாக கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து விமானத்துக்குள் பிரவேசித்த எசெக்ஸ் நகரப் பொலிஸார் அங்கு விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு பேரையும் கைதுசெய்தனர்.

எனினும் அவர்கள் இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விடயம் வெளியாகவில்லை.

இதன்போது பயணிகளும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 08-02-2016, 07:43.47 AM ]
கம்பளையைக் கலக்கிக் கொண்டிருந்த சிறுவர் கொள்ளைக் கும்பல் ஒன்றைக் கைது செய்து பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
[ Monday, 08-02-2016, 07:33.32 AM ]
பாடசாலையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றியபோது மயக்கமுற்ற மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார் என்று செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
[ Monday, 08-02-2016, 07:16.36 AM ]
கம்பஹா, ரத்துபஸ்வெல பிரதேசத்தில் குடிநீர் சுகாதாரமற்றது என்று கூறி மக்கள் கடந்த கால ஆட்சியின் போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
[ Monday, 08-02-2016, 07:14.24 AM ]
பதினான்கு வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சந்தேகநபர் வெலிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Monday, 08-02-2016, 07:05.27 AM ]
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடொன்றை செய்யும் வகையில் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லவுள்ளார்.
[ Monday, 08-02-2016 00:19:35 GMT ]
பெரு நாட்டில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனம் ஒன்று சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 08-02-2016 05:04:34 GMT ]
ஈராக்கில் சிக்கி தவித்து வரும் 39 இந்தியர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளனர்.
[ Monday, 08-02-2016 05:45:37 GMT ]
இலங்கையுடன் நடைபெறவிருக்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வென்றால் மட்டுமே இந்தியா முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
[ Sunday, 07-02-2016 14:37:27 GMT ]
தூங்கிகொண்டிருக்கும்போது காதுக்குள் எறும்பு போய்விட்டால் அதன் வலியை தாங்கிக்கொள்ள முடியாது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 07-02-2016 16:39:28 ]
தமிழீழ விடுதலை போராட்ட வாரலாற்றில், விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ஒட்டுக்குழுக்கள். இதை ஆங்கிலத்தில் Paramilitary என கூறுவார்கள்.