செய்தி
இலங்கையில் நவி.பிள்ளை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டமை தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கவனம்
[ திங்கட்கிழமை, 09 செப்ரெம்பர் 2013, 12:01.01 PM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அவரை சந்தித்து பேசிய மக்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் பலர் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.

மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் தொழிற்நுட்ப உதவிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமை பேரவையின் 24 வது அமர்வில் இன்று உரையாற்றிய ஜெனிவாவுக்கான அமெரிக்க பிரதிநிதி எய்லின் சம்பர்லின் டொனஹோ, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தை வரவேற்றுள்ளார்.

நவநீதம்பிள்ளை மனித உரிமைகள், சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி தொடர்பில் அக்கறை செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை நவநீதம்பிள்ளையின் அண்மைய இலங்கை விஜயத்தை வரவேறுள்ள ஐரோப்பிய ஒன்றியம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டது.

அத்துடன் நவநீதம்பிள்ளையின் விஜயத்தின் போது அவரை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் பற்றியும் ஒன்றியம் கவலை வெளியிட்டது.

இதனிடையே பிள்ளை சந்திக்க மக்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் ஜெர்மனி தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படும் நிலைமையை இது காட்டுகிறது என்று ஜெர்மனிய பிரதிநிதி குறிப்பிட்டார்.

இதேவேளை மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என ஒஸ்ரிய பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 10-02-2016, 02:47.52 PM ]
சிங்கள மக்களது புரிதல் இல்லாமல் அரசியல் யாப்பு நிறைவேற வாய்ப்பில்லை என்றும், தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் அண்மையில் குறிப்பிட்டிருக்கின்றார்
[ Wednesday, 10-02-2016, 02:19.45 PM ]
அவுஸ்திரேலியா நாடு கடத்திய இரண்டு பேரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Wednesday, 10-02-2016, 12:50.30 PM ]
நல்லிணக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ஊழல்,முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கைக்கு 31 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்க தீர்மானித்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016, 12:40.09 PM ]
உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலத்தை தாக்கல் செய்வது வரலாற்று தருணம் என உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016, 12:34.20 PM ]
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016 09:38:40 GMT ]
மூழ்கிய படகின் நுனியில் நின்றபடி நடுக்கடலில் தவித்துகொண்டிருந்த அகதியை கடற்படையினர் உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.
[ Wednesday, 10-02-2016 06:41:45 GMT ]
பாலிவுட் நடிகர் கோவிந்தா, தன்னுடைய ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் இழப்பீடு தொகை வழங்கவும் சம்மதித்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016 07:27:18 GMT ]
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே தனது மனைவி கூறிய ஒரு சுவாரஸ்ய தகவலால் வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார்.
[ Wednesday, 10-02-2016 13:30:10 GMT ]
கடல் வகை உணவுகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால் வாரம் இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 10-02-2016 01:21:58 ]
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.