செய்தி
(2ம் இணைப்பு)
 
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு தலா 70 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க
[ திங்கட்கிழமை, 18 நவம்பர் 2013, 09:36.39 AM GMT ]
இலங்கையில் நடைபெற்ற 23வது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் 54 உறுப்பு நாடுகளில் 21 நாடுகள் மட்டுமே கலந்து கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாநாட்டுக்கு 14 பில்லியன் ரூபாவை (1400 கோடி ரூபா)  அரசாங்கம் செலவு செய்துள்ளது.

21 நாடுகளே மாநாட்டில் கலந்து கொண்டனர். இதனடிப்படையில் பார்த்தால் ஒரு தலைவருக்கு தலா 70 கோடி ரூபாவுக்கும் மேலான பணத்தை அரசாங்கம் செலவிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெட்டப்பட்ட கேக்கின் விலை என்ன என்பதை அறிந்து கொள்ளும் தேவை மக்களுக்கு உள்ளது.

நான் முன்வைத்த இந்த புள்ளிவிபரங்கள் தவறாக இருந்தால் சரியான புள்ளி விபரங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

நாட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திறந்து விட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தினார்.

கொழு்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ரோம் உடன்பாட்டில் கைச்சாத்திடவில்லை என்பதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பம் தடுக்கப்பட்டது.

மகிந்த அரசு நாட்டை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியை திறந்தது - அத்தநாயக்க

எனினும் பொதுநலவாய மாநாட்டின் முடிவில் காணப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கான பாதையை திறந்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் காணப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கம் நாட்டுக்கு இந்த நிலைமையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இதன் காரணமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தியிருந்தால் இப்படியான சர்வதேச அழுத்தங்களை இலங்கை எதிர்நோக்கியிருக்காது என்றார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 01-07-2015, 11:39.38 AM ]
தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 01-07-2015, 11:34.08 AM ]
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015, 11:16.38 AM ]
முன்னாள் ஜனாதிபதிகள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானால், முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய சலுகைகளும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி சந்திரபால குமாரகே தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015, 11:13.47 AM ]
கடந்த வாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின் வடக்கில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதென்று தீர்மானித்ததன்படி, இன்று கிளிநொச்சி அரச செயலகத்தில் உயர்மட்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 01-07-2015, 11:09.19 AM ]
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பாரவூர்திகள் சங்கம் மற்றும் பருத்தித்துறை பிரதேச தலைவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக பல கோணங்களில் முழுவீச்சான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
[ Wednesday, 01-07-2015 08:48:04 GMT ]
ஒளி உமிழும் மர்ம பொருள் விண்ணில் பறந்து செல்லும் காட்சியை நாசா வெளியிட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 01-07-2015 07:21:10 GMT ]
தருமபுரியை சேர்ந்த இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்த மாவட்டத்தின் 195 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 01-07-2015 06:14:35 GMT ]
ஜிம்பாப்வே தொடருக்கு அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர் ரஹானேவுக்கு முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015 09:20:30 GMT ]
தந்தையிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து(Sperm) செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்ப்பப்பையில் உள்ள கருவுடன் (Egg) இணைந்து கரு முட்டை உருவாகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 30-06-2015 16:00:47 ]
ரணில் விக்ரமசிங்க தான் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பில் இருந்து புதிதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.