செய்தி
ஒலிவடிவம்:
விடுதலைப்புலிகளின் முத்திரைகள் ஒட்டப்பட்ட கடிதங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம்: இலங்கை தபால் மா அதிபர்
[ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 12:51.17 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளைக் கொண்ட கடிதங்கள் மற்றும் பொதிகளை கையாளும் போது, சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணித்துச் செயற்படப் போவதாக இலங்கை தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் கொண்ட முத்திரைகள் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளன.

சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதாவது, அங்கத்துவ நாடொன்றின் தபால் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியும்.

இதன் காரணமாக, சர்வதேச தபால் ஒன்றியத்தில் சில விதிகளை புறக்கணித்து நடக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என பிரான்ஸ் தபால்துறைக்கு கூறியுள்ளதாக இலங்கை தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயற்படப் போவதாகவும் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளுக்கு ஒருபோதும் இணங்கப் போதில்லை எனவும் இலங்கை தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 07-10-2015, 06:05.08 AM ]
சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்பவரின் மரபணு பொருந்தவில்லை.
[ Wednesday, 07-10-2015, 05:59.06 AM ]
ஜனநாயகம் என்றால் அங்கு நீதி இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. எனினும் எங்கள் நாட்டில் ஜனநாயகம் என்பது எப்படி இருந்தது, இருக்கிறது என்பது தெரிந்த விடயமே.
[ Wednesday, 07-10-2015, 05:58.09 AM ]
நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை ஊட்டுவில் தமிழ் வித்தியாலய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளதால் இந்தப்பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவர்களையும் ஊட்டுவில் தோட்டத்திலுள்ள மாற்றிடமொன்றில் கல்வி நடவடிக்கைகளை தொடரவுள்ளனர்.
[ Wednesday, 07-10-2015, 05:50.46 AM ]
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜப்பான் மன்னர் அக்கி ஹித்தோவை சந்தித்துள்ளார்.
[ Wednesday, 07-10-2015, 05:13.04 AM ]
அரசியல் தலையீடு அற்ற நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்னரே மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமென வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 07-10-2015 05:33:11 GMT ]
அமெரிக்க ஸ்டாண்ட்-அப் கொமெடியன் ஒருவர் தற்கொலைக்கு முயன்றவரின் எண்ணத்தை மாற்றியது அப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.
[ Wednesday, 07-10-2015 06:05:05 GMT ]
திண்டுக்கல் அருகே நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
[ Wednesday, 07-10-2015 05:24:36 GMT ]
அமெரிக்காவில் நடக்கவுள்ள கண்காட்சி டி20 கிரிக்கெட் போட்டியில் சச்சின், வார்னே, சங்கக்காரா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விளையாட உள்ளனர்.
[ Tuesday, 06-10-2015 11:35:07 GMT ]
நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுவகைகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 12:58:11 ]
ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன வேறுபாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு ஸ்ரீலங்கா மீதான பிரேரணையில் சிவில் அமைப்புக்களின் பங்கு என்ற அடிப்படையில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர்.