செய்தி
ஒலிவடிவம்:
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீது இலக்கு வைக்கும் சிறிலங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 01:38.34 AM GMT ]
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முன்னாள் போராளிகளை பலரை பயங்கரவாதத்தின் பெயரால் மீண்டும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு பயங்கரவாத நடடிவடிக்கைகளில் முன்னாள் போராளிகள் பலர் ஈடுபட்டு வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய சமீபத்திய நாட்களில் தொடர்சியாக தெரிவித்து வந்துள்ள நிலையில இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கட்சிகளுடன் முன்னாள் போராளிகள் பலர் தொடர்பு வைத்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் குற்றச்சாட்டுக்களை சுமந்தியிருந்தார்.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் மீண்டும் பதற்ற நிலையை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளில் முன்னாள் பேராளிகள் ஈடுபட்டுவருவதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளேடான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர்கள் பலர் சுற்றுலாப் பயணிகள் போல், வடக்குக்கு சென்று, முன்னாள் பேராளிகளுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்துவதாக தெரிவித்துள்ள திவயின, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் நிலைப்பாட்டினைக் கொண்டு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்த முன்னாள் போராளிகள் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க முன்னாள் போராளிகளை வைத்து சிறிலங்கா அரசாங்கம் தெருக்கூத்தை நடத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதி அரியநேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பேராளிகளை அவர்களின் உறிவினர்களிடம் ஒப்படைப்பதற்கு மாறாக தனது பிரச்சாரங்களுக்கு ஏற்ற வகையில் போராளிகள் விடுவிப்பு நிகழ்வுகளை நடாத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் முன்னாள் பேராளிகளை விடுவிப்பதற்கான நிகழ்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையிலேயே அரியநேந்திரன் அவர்கள் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நிகழ்வுகளை ஒவ்வொரு இடமாக நடத்தி அதனை ஒர் தெருக்கூத்துப் போல் அரசாங்கம் நடாத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள அரியநேந்திரன் விடுவித்த பின்னரும் சிறிலங்காப் படைகளினால் அவர்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் நெருக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 01-09-2015, 02:19.32 PM ]
மிக நீண்ட காலமாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல் பிரதிநிதிகள், அதாவது தமிழ் மக்களின் தாயக பூமியென பெயரிடப்பட்டுள்ள தமிழீழத்தின் தமிழ் பிரதிநிதிகள் வேறுபட்ட கட்சிகள் மூலமாக இலங்கைத் தீவின் பாராளுமன்றம் சென்று, அங்கு இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற இருக்கைகளை காலம் காலமாக சூடாக்கி வருகின்றனர்.
[ Tuesday, 01-09-2015, 02:17.32 PM ]
வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தியாளர்கள் வெற்றிடத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளதாக வட மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 01-09-2015, 01:48.24 PM ]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென அக்கட்சியின் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

[ Tuesday, 01-09-2015, 01:48.22 PM ]
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்புக்கு உள்ளக விசாரணை பொறிமுறையை கோருவதற்கான சமிக்ஞையே அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்பின் போது எமக்க காட்டடப்பட்டது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் கூறியுள்ளார்.
[ Tuesday, 01-09-2015, 01:13.53 PM ]
இனப்பிரச்சினைக்கான தீர்வு, இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை பற்றி ஜனாதிபதி கொள்கை விளக்கவுரையில் தெரிவிக்கவில்லையென கூறப்படுகிறது.
[ Tuesday, 01-09-2015 07:15:16 GMT ]
இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர்.
[ Tuesday, 01-09-2015 08:47:35 GMT ]
அவுஸ்திரேலியாவில் நடைபாதைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு, உணவிட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை அவுஸ்திரேலியா கவுரவித்துள்ளது.
[ Tuesday, 01-09-2015 08:37:22 GMT ]
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எனது ரோல் மொடல் என்று இந்திய ஒருநாள் தொடரின் அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
[ Tuesday, 01-09-2015 14:41:41 GMT ]
செரிமானம், மலம் பிரச்சனை, உடல் பருமன், குமட்டல், வாந்தி, தூக்கமின்மை, இரத்த சோகை, ஆஸ்துமா, கண் எரிச்சல் போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்க கூடியது தேன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 01-09-2015 14:19:32 ] []
மிக நீண்ட காலமாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல் பிரதிநிதிகள், அதாவது தமிழ் மக்களின் தாயக பூமியென பெயரிடப்பட்டுள்ள தமிழீழத்தின் தமிழ் பிரதிநிதிகள் வேறுபட்ட கட்சிகள் மூலமாக இலங்கைத் தீவின் பாராளுமன்றம் சென்று, அங்கு இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற இருக்கைகளை காலம் காலமாக சூடாக்கி வருகின்றனர்.