செய்தி
ஒலிவடிவம்:
 Photo
கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளிக்கும் திருமணம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 01:44.11 AM GMT ] [ புதினப்பலகை ]
கிளிநொச்சியில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி  செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவ பிரதேசத்தைச்  சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இலங்கை இராணுவச் சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவ பிரதேசத்தில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 02-08-2015, 10:09.58 AM ]
யுத்தத்தின் போது தேசிய அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவிக்காதவர்கள் இன்று தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஆயத்தமாகின்றார்கள் என குருணாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Sunday, 02-08-2015, 09:53.41 AM ]
குருநாகலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் பணியகத்தில் ஆயுதம் தாங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Sunday, 02-08-2015, 09:42.08 AM ]
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
[ Sunday, 02-08-2015, 09:36.35 AM ]
பொதுத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஆட்சியமைக்கும் வகையில் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க இரு கட்சிகளை சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
[ Sunday, 02-08-2015, 08:40.39 AM ]
பற்களையும் விலா எலும்பையும் உடைத்து கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி கொலை செய்யப்படடதாக கூறப்படும் பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கும் காவற்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Sunday, 02-08-2015 08:39:40 GMT ]
சர்வதேச அளவில் நண்பர்கள் தினம் எல்லோராலும் விரும்பியே கொண்டாடப்பட்டு வருகிறது.
[ Sunday, 02-08-2015 07:51:18 GMT ]
ஹைதராபாத்தி்ல் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு பொலிசார் நூதன தண்டனை வழங்குகின்றனர்.
[ Sunday, 02-08-2015 07:27:16 GMT ]
இங்கிலாந்தின் முன்னணி துடுப்பாட்டக்காரரான ஜோ ரூட்டுக்கு மதுபாரில் கொண்டாட்டத்தில் ஈடுபட கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
[ Sunday, 02-08-2015 08:27:07 GMT ]
தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 02-08-2015 02:48:24 ]
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த ஐ.நாவும், இலங்கை அரசாங்கமும் இரகசியமான இணக்கமொன்றுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக எழுந்திருக்கிறது.