செய்தி
முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 02:09.26 PM GMT ]
புனர்வாழ்வின் மூலம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், நாட்டில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டால் மீண்டும் கைது செய்யப்படுவீர்கள் என இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாட்டின் ஸ்திரதன்மை சீர்குலைக்கப்படுகின்றது. எனவே அவ்வாறான குழுக்களுடன் முன்னாள் போராளிகள் இணைந்து செயற்பட்டால் அவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது எனவும் இவர்கள் சட்ட ரீதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள்போராளிகள் குறித்து இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னாள் போராளிகள் ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து செயப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதுல் பிரேமலத்ன வெளியிட்ட கருத்துக்கே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-04-2015, 10:44.52 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிலைநாட்டுவதற்காக முன்வைத்த 100 நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
[ Saturday, 25-04-2015, 10:24.25 AM ]
ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிய மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட ரீதியான செயற்பாடுகள் எந்த விதத்திலும் நிறுத்தப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-04-2015, 10:20.17 AM ]
நேபாளத்திலும், இந்தியாவிலும் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-04-2015, 09:34.18 AM ]
தான் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக எந்தவொரு விசாரணைக்கும் ஆஜராகத் தயாரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-04-2015, 09:17.01 AM ]
டலஸ் அழகபெரும போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ரயில் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் குறித்து நிதி மோசடி பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மோசடிகள் பற்றி தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
[ Saturday, 25-04-2015 09:04:25 GMT ]
நேபாளத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
[ Saturday, 25-04-2015 07:29:07 GMT ]
அல்கொய்தா இயக்கத்தின் இந்திய கிளையின் துணை தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Saturday, 25-04-2015 06:01:16 GMT ]
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் –சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
[ Saturday, 25-04-2015 07:26:41 GMT ]
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள், அதில் ஒன்றுதான் Polycystic Ovary Syndrome.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 24-04-2015 07:44:43 ]
உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது.