செய்தி
ஒலிவடிவம்:
பிரான்ஸில் தமிழ் மக்களுடைய முத்திரைகளே வெளியிடப்பட்டன- பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை
[ சனிக்கிழமை, 07 சனவரி 2012, 02:15.27 AM GMT ]

பிரான்ஸ் அஞ்சல் சேவையான La Poste தமிழீழ விடுதலைப்புலிகளின் 11 வித்தியாசமான படங்களை கொண்ட முத்திரைகளை வெளியிட்டதாக இலங்கையின் செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரொஹான் ரம்புக்வெல என்பவர் பிரான்ஸில் இருந்து அனுப்பிய தகவலாக இந்த செய்தியை அது வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது படம், தமிழீழ தேசப்படம் ஆகியன இந்த முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளதாக செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

La Poste  360 மற்றும் 3000 முத்திரைகளை முதலாவது இரண்டாவது பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

இதன் பெறுமதி 60 சதங்களாகும். இந்த முத்திரைகள், பிரான்ஸில் 20கிராம் அஞ்சல் பொதிகளுக்கு பயன்படுத்தக்கூடியதாகும்.

இந்த முத்திரைகள்,பிரான்ஸின் அஞ்சல் சட்டங்களுக்கு அமையவே வெளியிடப்பட்டதாக பிரான்ஸின் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இதேபோன்ற முத்திரைகள், சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் கடந்த வருடமும், திருகோணமலையில் படையினரால் கொல்லப்பட்ட 5 மாணவர்களின் நினைவாக அமெரிக்காவில் இந்த வருடமும் வெளியிடப்பட்டதாக பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இந்த முத்திரைகள், தமிழீழ விடுதலைப்புலிகளுடையது அல்ல, தமிழ் மக்களுடையது என்று பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் பிரான்ஸ_க்கான இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க, இந்த முத்திரை வெளியீடு தொடர்பில் பிரான்ஸின் அஞ்சல் திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 06-05-2015, 01:04.11 AM ]
20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக புதிய முறையில் தேர்தல் நடத்த முடியாவிட்டால் பழைய முறையிலேனும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதளுவாவே சோபித தேரர் கோரியுள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 12:59.42 AM ]
பிரிட்டன் பொதுத்தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Wednesday, 06-05-2015, 12:51.50 AM ]
தமது பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ வீரர் ஜனாதிபதி மைத்திரிபாலவின் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, தமக்கு மற்றும் தமது குடும்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டின் மற்றுமொரு அத்தியாயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 12:46.49 AM ]
இலங்கைக்கு வந்திருந்த அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மற்றும் அவரின் பிரதிநிதி ஆகியோர், இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் எடி எம் சுவாமிநாதனை சந்தித்துள்ளனர்.
[ Wednesday, 06-05-2015, 12:38.17 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்தால் அதன் நன்மைகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 05-05-2015 14:26:54 GMT ]
சீனாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நூதனமான வேடிக்கை நிகழ்ச்சிகளை சுற்றுலா துறை நடத்தி வருகிறது.
[ Tuesday, 05-05-2015 13:16:42 GMT ]
இந்திய மெட்ரோ நகரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு கடுமையான நுரையீரல் பிரச்சனை இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
[ Tuesday, 05-05-2015 15:54:26 GMT ]
நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39வது போட்டியில் மும்பை இண்டியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
[ Tuesday, 05-05-2015 14:51:05 GMT ]
உணவுகளை உட்கொண்ட பின் குளிர்பானங்களை அருந்துவதால் உடலுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 05-05-2015 07:25:59 ]
குருஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. துவாரகையில் குடியிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி கேட்டு துரியோதனனும் அருச்சுனனும் செல்கின்றனர்.