செய்தி
ஒலிவடிவம்:
முன்னாள் போராளிகள் பொலிஸ் சேவையில்!
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 12:32.41 AM GMT ]
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைணக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தேவையான கல்வி மற்றும் ஏனைய தகைமைகளைக் கொண்டிருந்து பொலிஸ் சேவையில் இணைய விரும்பினால், அவர்கள் நிச்சயமாக இலங்கைப் பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1000 முன்னாள் போராளிகளுக்கு தற்போது பல்வேறு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட் போராளிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், அவர்கள் இப்போது சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நாம் பாரபட்சம் காட்டமுடியாது. அவர்களுக்கு போதிய கல்வித் தகுதியிருந்தால் அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இல்லாதிருந்தால் பொலிஸ் சேவையில் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 07-05-2015, 08:10.17 AM ]

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு பிரதானி தற்போது கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ Thursday, 07-05-2015, 07:42.00 AM ]
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 07-05-2015, 07:38.28 AM ]
நாட்டில் ஆட்சியாளர் மட்டுமன்றி, ஆட்சியாளரின் அப்பாவாக இருந்தாலும் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ Thursday, 07-05-2015, 07:16.05 AM ]
நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
[ Thursday, 07-05-2015, 07:05.22 AM ]
சீனா- இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 07-05-2015 07:44:13 GMT ]
கஜகஸ்தான் நாட்டில் சிறுவன் ஒருவன் மது மற்றும் சிகரெட் குடிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
[ Thursday, 07-05-2015 07:46:29 GMT ]
என் உயிரினும் மேலான தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களிடம் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
[ Thursday, 07-05-2015 06:40:24 GMT ]
இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்பயிற்சி வழங்கும் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 07-05-2015 08:17:07 GMT ]
இயற்கை நமக்கு அளித்துள்ள வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 06-05-2015 08:31:51 ] []
ஐக்கியமானதும் சமாதானமானதுமான இலங்கையே தமது தொலைநோக்கு என்று தமிழ் தலைவர்கள் தெரிவித்திருப்பதை கேட்கக்கூடியதாக இருந்தமை ஆர்வமான விடயமாக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கருத்து கூறியிருக்கின்றார்.