ஆணவக் கொலை வழக்கு...! முதல் முறையாக தூக்கு தண்டனை

Report Murali in சிறப்பு
advertisement

ஆணவக் கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் முதல் முறையாக தூக்கு தண்டனை விதித்து தமிழக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜாதி மாறி திருமணம் செய்துக்கொண்டவரின் சகோதரியை ஆணவக் கொலை செய்த தம்பதியினருக்கே இவ்வாறு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

திருநெல்வேலி, வண்ணார்பேட்டையைச் சேர்ந்த விஸ்வநாதன், காவிரி என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தனது மகளை தேடி வந்த காவிரியின் பெற்றோர், இது குறித்து விஸ்வநாதனின் சகோதரி கல்பனாவிடம் விசாரித்துள்ளனர்.

அதன் பின்னர், கர்ப்பிணி பெண்ணான கல்பனாவை காவிரியின் பெற்றோர் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட கல்பனா மற்றும் அவரது சகோதரர் விஸ்வநாதன் ஆகியோர் தலித் இனத்தை சேர்ந்தவர்களாவர்.

எனவே, இதனை ஆணவக் கொலையாக கருதி, திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இடம்பெற்ற ஆணவக் கொலை தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் முதன் முறையாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

advertisement

பிந்திய செய்திகள்

மேலும் பிந்திய செய்திகளுக்கு

இதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்

மேலும் செய்திகளுக்கு

Comments