ரஷ்யா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு மைத்திரி கொடுத்த பரிசு!!

Report Print Nivetha in சிறப்பு

18 ஆவது ஆசிய பௌதீக விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ரஷ்யா செல்லவுள்ள இலங்கை மாணவ குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் சைபீரியா மாநிலத்தில் Yakutsk பல்கலைக்கழகத்தில் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒன்பதாம் திகதி வரை நடைபெறவுள்ள போட்டியில் 22 ஆசிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இதற்காக இலங்கையில் இருந்தும் மாணவ குழுவினர் ரஷ்யா செல்லவுள்ளனர். இதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி இக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபா பயணச்செலவு கொடுப்பனவை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மே.டீ.எம்.அமாயா தர்மசிறி, ஆர்.பீ.நிசல் புன்சர, யூ.பி.சதுர ஜயசங்க, எம்.பீ.எஸ்.டிமல் தனுக்க, ஏ.கே.ஏ.ரன்துல, மொஹமட் அப்லால் மொஹமட் அபாம், டி.எம்.எஸ்.சமரகோன், பீ.ஜீ.எஸ்.சத்துரங்க பண்டார ஆகிய மாணவ, மாணவிகளுக்கு இவ்வாறு ஒரு லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், இலங்கை சர்வதேச பௌதீக விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.ஆர்.டீ.ரோசா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments