அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதா? உலகத்தையே வியப்பில் ஆழ்த்தும் ஒரே கேள்வி!

Report Print Mawali Analan in சிறப்பு
advertisement

எந்த ஒரு செயலுக்கும் எதிர் விளைவு மிகப் பாதகமாக அல்லது சாதகமாக அமையும் என்பதனை வரலாறுகள் பல நிரூபித்து உள்ளன.

அதேபோன்று ஒரு செயல் நடைபெறாவிட்டால், அல்லது நடந்து விட்டால் அதனால் கிடைக்கும் எதிர் விளைவு ஒன்று நன்மையாக அமையும்.,

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அல்லது மிகக்கொடூர அழிவுகளை ஏற்படுத்தும். இந்த இடத்தில் அவையும் கூட எதிர்பாராத திருப்புமுனை என்றும் கூறலாம்.

அந்த வகையில் உலகில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய சம்பவங்களும் சரி, தனி மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய சம்பவங்களும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

அனைத்துக்கும் ஓர் தொடர்பு உண்டு ஏற்கனவே திட்டமிட்ட வகையிலேயே ஒவ்வோர் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்கள் இதற்கு நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு (Intelligent design) எனப் பெயரிட்டுள்ளனர்.

உதாரணமாக உலகில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது உலக யுத்தங்கள். அதிகார போட்டி காரணமாக கோடிக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டன.

இவற்றில் பிரதான பங்கினை வகிப்பவர் ஹிட்லர் என்பதனை உலகம் நன்றாகவே அறியும். ஆனால் ஒரு சிறு சம்பவம் நடைபெற்றிருந்தால் அது இப்போது உலக வரலாற்றையுமே மாற்றி இருக்கும்.

ஹிட்லர் மிகக் கொடூரமானவர் என்பதே வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஆனால் அவர் மிகச்சிறந்த ஓர் ஓவியர். ஆனால் அவருக்கு கலைக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த ஓவியம் ஹிட்லரால் வரையப்பட்டது. இதனையே அவர் கலைக்கல்லூரியில் சேர்வதற்கு அனுப்பி வைத்தார் எனினும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

1908ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அவர் கலைக்கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்போ அல்லது தேர்வுப் பரீட்சை எழுதுவதற்கோ அனுமதி கொடுக்கப்படவில்லை.

அப்போது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால். வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். இது போன்று வரலாற்றை மாற்றியமைத்தது எதிர்பாராமல் நடந்த சம்பவங்களே.

அதன் படி எந்த ஒரு சம்பவமும் அடுத்து ஓர் விளைவினை ஏற்படுத்தும். அது நன்மையா அல்லது தீமையா என்பது நடந்து முடிந்த பின்னரே அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் எந்த ஓர் சம்பவமும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என கூற முடியமா? அல்லது அனைத்தும் திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றன எனக் கூறுவதா?

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதற்கான விடைகள் கூறப்படவில்லை. என்றாலும் இன்று வரை உலக அறிவியலாளர்களும் சரி, ஆன்மீகவாதிகளும் சரி விடையை கூற முடியாது இருக்கும் விடயமே இது.

இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற நியதி எப்போதோ நிச்சயிக்கப்பட்டது. அதன் படியே உலகம் இயங்குகின்றது என்பதனை மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரணம் இன்றி எதுவும் நடக்காது. ஒவ்வோர் செயலுக்கும் எதிர் விளைவு என்பது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எவ்வாறு என்ற கேள்விக்கு மட்டும் விடை காண முடிந்தால்..?

இந்த உலக இயக்கத்தையே கூட மாற்றியமைக்கலாம் என்பது இப்போது அனைத்து அறிவியல் புத்திஜீவிகள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அப்படி என்றால் அதற்கான விடை என்ன?

மனிதனை இயக்குவது எது, விதியா?, கடவுளா?, அறிவியலா?, ஆற்றலா? அதுவே பிரபஞ்சத்தின் இரகசியமா? இந்தக் கேள்வியே ஒட்டு மொத்த உலகத்திற்கும் வியப்பினை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

advertisement