உலக பாரம்பரிய ஸ்தலங்களின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கையின் ரஜமஹா விகாரை

Report Print Shalini in சிறப்பு

யுனெஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய ஸ்தலங்களின் பட்டியலில் தம்புள்ளை - ரஜமஹா விகாரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனால் ரஜமஹா விகாரையில் உள்ள பண்டைக்கால ஓவியங்களை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விகாரையின் வளாகத்திலுள்ள பண்டைக்கால ஓவியங்களை பாதுகாப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் ஆணையாளர் பேராசிரியர் பி.பி.மந்தாவெல தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்திற்கு மத்திய கலாச்சார நிதியம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.