இலங்கையில் 100 வயதை கடந்தவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

Report Print Shalini in சிறப்பு

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள 100 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை கௌரவப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில் 100 வயதைக் கடந்த முதியவர்களின் தகவல்களையும், ஒரு குடும்பத்தில் 15 பிள்ளைகளுக்கு மேல் உள்ள இருக்கும் 75 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் விபரங்களும் திரட்டப்படுகின்றன.

குறித்த தகவல் திரட்டும் பணியில் தேசிய முதியோர் செயலகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி பத்தரமுல்லையில் வைத்து இவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

மேலும்,100 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும், ஒரு குடும்பத்தில் 15 பிள்ளைகளுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்ற 75 வயது பெற்றோர்களுக்கும் ஓர் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமது விபரங்களை 31ம் திகதிக்கு முன்னர் தாம் வசிக்கும் பிரதேச செயலகத்திற்கு தெரிவிக்கும் படி தேசிய முதியோர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.