சாஹிரா கல்லூரியின் 125ஆவது ஆண்டு பூர்த்தி: மருதானை வீதியை வண்ணமயமாக்கிய மாணவர்கள்

Report Print Akkash in சிறப்பு

மருதானை சாஹிரா கல்லூரியின் 125ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நடைபவனி காலை 7.30 மணியளவில் பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.

இந்த நடைபவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததுடன், மாணவர்களின் பான்ட் வாத்தியக்குழு நடைபவனியில் முன்னிலை வகித்திருந்தது.

மதப்பிரார்த்தனைகளுக்கு பின்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனியில் மாறு வேடங்களை தரித்துக் கொண்டும் மாணவர்கள் கலந்திருந்து சிறப்பித்திருந்தனர்.

தேசியக்கொடி மற்றும் பாடசாலைக் கொடிகளை தாங்கிச் சென்ற மாணவர்களின் இந்த நடைபவனி மருதானை வீதிப்பகுதியை வண்ணமயமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.