இராவணன், சீதையை சிறை வைத்த இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி

Report Print Nivetha in சிறப்பு
advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை தவிர மற்றவர்கள் நுவரெலியாவில் உள்ள சீதா அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதேவேளை, உமேஷ் யாதவ் தனது மனைவியுடன் சீதா அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

கண்டியில் கிரிக்கெட் பயிற்சியில் இருந்த அவர்கள், அங்கிருந்து இந்த கோவிலுக்குச் சென்றுள்ளனர். இது இராவணன், சீதையை சிறை வைத்திருந்த அசோகவனம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கோவிலில் உள்ள பாறைகளில் வட்ட அழுத்தங்கள் உள்ளன. இது இராவணனுடைய யானையின் கால் தடம் என்று கூறப்படுகிறது.

மேலும், முதல் 2 டெஸ்டுகளில் வென்ற இந்திய அணி, இன்றைய தினம் 3ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement