ஆபாசமாக தோன்றிய மைக்கல் ஜாக்சனின் மகள்! பௌத்த மதத்திற்கு மாற்றம்

Report Print Vethu Vethu in சிறப்பு
advertisement

மறைந்த பிரபல பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்சனின் மகள் பௌத்த மதத்திற்கு மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

19 வயதான பெரிஸ் ஜெக்ஸன் என்ற யுவதியே இவ்வாறு மதம் மாறியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கடந்த காலங்களில் அரை நிர்வாணமாக பௌத்த சிலைக்கு அருகில் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டமையினால் பல சர்ச்சைகளில் அவர் சிக்கியிருந்தார்.

பௌத்த மதத்துடன் நான் இணைக்கப்படுவதாகவும், அதற்கமைய தான் வாழ முயற்சிப்பதாகவும் பின்னர் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தியானம் செய்வதன் ஊடாக தனக்குள் ஆன்மீக ஆற்றலை வலுப்படுத்தி கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி பிரபல பொப் இசை அரசர் மைக்கல் ஜெக்சன் உயிரிழக்கும் போது, அவரது மகளின் வயது 11 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement