17 வருடங்களின் பின்னர் இலங்கை செல்ல தயாரான கனேடிய தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை!

Report Print Vethu Vethu in சிறப்பு

17 வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து இலங்கை செல்ல விரும்பிய தமிழ் குடும்பம் ஒன்று முகங்கொடுத்த நெருக்கடி தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லண்டன் ஊடாக இலங்கை செல்வதற்கான பயண ஏற்பாடுகளை ரொறன்ரோ வாழ் இலங்கை குடும்பம் ஒன்று செய்தது.

குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்திற்கு சென்ற போதும், அவர்களின் பயணத்தை தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டது.

எயார் கனடா ஊடாக லண்டன் பயணிப்பதற்காக சென்ற மகேஸ்வரன் குடும்பத்தினர், மேலதிகமாக 4000 டொலர்களை செலவிட்டு அடுத்த நாளே அவர்களின் பயணத்தை ஆரம்பித்தனர்.

கடந்த ஜுன் மாதம் 27ஆம் திகதி சாந்தி திவாகரன், அவது கணவர் திவா மகேஸ்வரன், அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் மகேஸ்வரனின் தாய் ஆகியோர் ரொறன்ரோ Pearson விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே அவர்கள் லண்டன் செல்லும் எயார் கனடா விமானத்தில் பயணிக்கும் நோக்கில் வருகை தந்துள்ளனர்.

லண்டனிலிருந்து, அவர்கள் இலங்கைக்கு செல்ல விமான டிக்கட் பதிவு செய்தனர். விடுமுறைக்காக 17 வருடங்களின் பின்னர் மகேஸ்வரனின் குடும்பம் தாயகத்திற்கு செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

எயார் கனடா முகவர் அந்த குடும்பத்தை தவறான விமான நிலைய சோதனைக்கு அனுப்பிய போது, அவர்களது பயணத் திட்டத்தில் சிக்கல் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களுக்கு முன்னர், அவர்கள் சரியான வரிசைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முன்னால் மூன்று பயணிகள் லண்டன் விமானத்திற்கு செல்ல தயாராக இருந்தனர்.

ஒரு முகவர் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தை சோதனையிட ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் செல்லவில்லை என மேலாளர் அறிவித்துள்ளார் என சாந்தி திவாகரன் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மிகவும் வருத்தமாக இருந்தோம் என மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். என் அம்மா அழுகிறார், சிறுவர்கள் அழ ஆரம்பித்தார்கள், நான் கிட்டத்தட்ட அழுது கொண்டிருந்தேன், அது உணர்ச்சிபூர்வமான நேரமாக மாற்றமடைந்தது.

விமானத்தில் இடமில்லை என அந்த குடும்பத்திற்கு எயார் கனடா ஊழியர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த விமானத்தில் கிட்டத்தட்ட 8 வெற்றிடங்கள் காணப்பட்டதாக எயார் கனடா விமான சேவை, செய்தி சேவை ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் யாரும் இந்த விடயத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

அதற்கு பதிலாக, அந்த குடும்பத்திற்கு விமான டிக்கெட் வரி செலுத்தப்படும் எனவும், மீண்டும் விமான டிக்கட்களை பதிவு செய்யலாம் எனவும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்த பின், டிக்கட் பதிவு செய்யப்படும் இடம் 11 மணியளவில் மூடப்பட்டுள்ளது.

எயார் கனடா பின்னர் அந்த குடும்பத்தை மற்றொரு சோதனை முகவரிடம் அனுப்பியது. ஆனால் அந்த முகவர் தன்னால் உதவ முடியாதென குறிப்பிட்டுள்ளார். தான் டிக்கட் வழங்குவதற்கு பயிற்சி பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அந்த சமயத்தில், சிரிக்கலாமா அல்லது அழுவதா என்று எனக்குத் தெரியவில்லை என சாந்தி குறிப்பிட்டுள்ளார். நான் மிகவும் உதவியற்றவராக உணர்ந்தேன். சுவர் மீது என் தலையை அடித்து கொள்ளலாம் போல் உணர்ந்தேன் என அவர் கூறியுள்ளார்.

அவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுவதற்கு முன்னர் அடுத்த நாள் அடுத்த எயார் கனடா விமானத்தை பதிவு செய்ய ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது என நிர்வாகி அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

அந்த குடும்பம் விமான நிலையத்திலிருந்து 12:45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9 மணிக்கு மீண்டும் திரும்பினார்கள்.

இந்த நேரத்தில் இரண்டு மணி நேரம் டிக்கெட் கவுன்டரில் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் இறுதியாக ஒரு முகவரிடம் பேச வந்த போது, அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றார்.

அதன் பின்னர் மீண்டும் அவர்கள் பயணிப்பதற்கு 4000 டொலரை மேலதிகமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எவ்விதமாக காரணங்களும் காணப்படவில்லை என சாந்தி திவாகரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து கனடா திரும்பி சென்ற பிறகு, சாந்தி திவாகரன் எயார் கனடாவுக்கு எதிரான முறைப்பாடு செய்ததுடன், இழப்பீடு கோரியுள்ளார்.

எயார் கனடா விமான சேவையினால் அடுத்த முறை பயணம் மேற்கொள்வதற்கு 25 வீத சலுகை மாத்திரம் வழங்கியுள்ளது.

நான் மீண்டும் எயார் கனடாவில் பயணம் செய்வதில்லை என சாந்தி திவாகரன் குறிப்பிட்டுள்ளார். நான் என் மரண படுக்கையில் இருந்தாலும், அமெரிக்காவில் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டியிருந்தாலும், எயார் கனடாவில் செல்வதை விட நான் இறந்து விடுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.