இர்மா புயலின் கொடூர கோரத்தாண்டவம்! சமூகவலைதளங்களில் வைரலாகும் காணொளிகள்

Report Print Murali Murali in சிறப்பு

இர்மா புயலின் கோரத் தாண்டவத்தில் உருக்குலைந்த தெற்கு புளோரிடாவின் பல்வேறு இடங்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூறாவளியால் மற்றும் மழையால் புளோரிடா மாகாணத்தை நாசப்படுத்திவிட்டது இந்த இர்மா புயல். சாலைகள் ஆறுகளாக காட்சியளிப்பதோடு, மரங்கள் வேரோடு தூக்கி வீசப்பட்டன.

நேற்று மாலை, அமெரிக்க நேரப்படி நேற்று காலை அந்த புயல் புளோரிடாவில் கரையை கடந்தது. கரையை கடந்த சம்பவம் இது எந்தளவுக்கு கோரத் தாண்டவம் ஆடியது என்பது குறித்து புகைப்படங்கள் கண்முன்னே வந்து விளக்குவது போல் உள்ளன.

முறிந்து கிடக்கும் மின்கம்பங்கள்

தெற்கு புளோரிடாவில் இர்மா புயலால் தாக்கு பிடிக்க முடியாத மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன.

அச்சுறுத்தும் புயல்

இந்த இர்மா புயல் கரையை கடந்த போது காற்று பலமாக வீசியது. தென்னை மரங்கள் தரையை தொடும் அளவுக்கு வளைந்தன.

விக்டோரியா பார்க்

விக்டோரியா பூங்கா பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள காட்சிகள். அந்தளவுக்கு மழை கொட்டி தீர்த்தது.

அசைந்தாடும் மரங்கள்

இர்மா புயலின் புல்லட் வேகத்தால் மரங்கள், செடி, கொடிகள் அசைந்தாடும் காட்சிகள்.

மின் கம்பிகள் அறுந்து தொங்கின

காற்றின் வேகத்தால் மின் கம்பம் ஊசலாடி கொண்டிருக்கும் காட்சி.

சூறைக் காற்று

கடுமையாக வீசி வரும் சூறைக்காற்றால் பேய்யாட்டம் ஆடும் மரங்கள்.

சிக்னல் விளக்குகள்

பலமாக அடித்த காற்றுக்கு போக்குவரத்து சிக்னல் விளக்குகள் முறிந்தன.

துவம்சம் ஆகியுள்ள பெட்ரோல்

பங்க் தெற்கு புளோரிடாவில் சேதமடைந்த பெட்ரோல் பங்க்.

கும்முனு இருக்க...

மியாமி கடற்கரையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து கஷ்டப்பட்டு மீட்ட மதுபாட்டிலை கொண்டு செல்லும் நபர்.

பீதியிலும் ஒரு குதூகலம்

இர்மா புயலின் கோரத்தாண்டவத்துக்கு பின்னர் மழைநீரில் குதூகலமாக சறுக்கு விளையாட்டு விளையாடும் முதியவர்.

- One India