அழிக்கப்படும் ஒரு இனத்தின் அவல நிலையை கூறும் புகைப்படங்கள்!

Report Print Murali Murali in சிறப்பு

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

மியன்மார் தேரவாதா பௌத்த சமயத்தை பின்பற்றி வரும் ஒரு நாடாகும். அந்நாட்டில் பல்வேறு பழங்குடியினரும், வெவ்வேறு இனக்குழுக்களும் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 4 வீதமான சிறுபான்மை ரோஹிங்யா இஸ்லாமிய இனக்குழு இருக்கின்றனர். இவர்கள் மீது கடந்த காலங்களில் அந்நாட்டு பெரும்பான்மையின மக்கள் அடக்குமுறையில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது அந்நாட்டு இராணுவத்தினருடன் இணைந்து அவர்களுடைய எண்ணத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அண்மை காலமாக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக அங்கிருந்து வெளியேரும் ரோஹிங்யா முஸ்லிம்கள், பங்களாதேஷில் அடைக்களம் கோரியுள்ளனர். அத்துடன், ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் அடக்குமுறையின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்து உலக நாடுகள் பலவும் மியன்மார் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இந்நிலையில், மியன்மாரில் அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பான புகைப்படங்களை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்திற்கு சென்ற ரோஹிஞ்சா அகதிகளின் படகு சாய்ந்ததால், படகில் இருந்து குதிக்கும் ரோஹிஞ்சா பெண்.

வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்படும் நிவாரணப் பொருட்களை பிடிக்கும் ரோஹிஞ்சாக்கள்.

உணவுக்காக காத்திருக்கும் ரோஹிஞ்சாக்கள்.

வங்கதேச அகதிகள் முகாமில், பிறந்து ஆறு நாட்களில் இறந்துபோன பச்சிளம் குழந்தையை புதைக்கும் குடும்பத்தினர்.

தங்களது கிராமங்கள் பற்றி எரிவதை பார்த்தபடி, உயிரை காப்பாற்றிக்கொள்ள வங்கதேசம் செல்லும் ரோஹிஞ்சாக்கள்.

பல நாள் நடைபயணத்தின் மத்தியில் சற்று ஒய்வு.

பயணம் செய்துவந்த படகு சாய்ந்ததால், அதிர்ச்சியில் மயக்கமடைந்த தனது சகாவை கண்டு அழும் பெண்

தனது குழந்தைகளையும், உடமைகளையும் சுமந்து செல்லும் ரோஹிஞ்சா ஆண்

அகதி முகாம்கள் நிரம்பி வழிவதால், சாலையோரத்தில் தற்காலிக வீடுகளை அமைத்து தங்கியுள்ளனர்.

உணவுக்கு ஓடும் ரோஹிஞ்சா மக்கள்

உடல் நலிவுற்றவரை தூக்கிகொண்டு வங்கதேசத்திற்கு பயணம்

உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் உள்ளுர் வங்கதேசத்தினர்

வங்கதேச மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா ஒருவரின் காலில் உள்ள துப்பாக்கித் தோட்டா.