ஜனாதிபதியின் தலைமையில் அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கல் விழா

Report Print Shalini in சிறப்பு

2017ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் வைபவம் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது.

குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 14ஆம் திகதி யாழ். இந்துக் கல்லூரியின் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் பல அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் செயலாளரால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.