யாழில் வைத்தியர் அம்பிகைபாகனின் திருவுருவச்சிலை திறப்பு

Report Print Shalini in சிறப்பு

யாழ். மக்களால் கடவுள் என அன்பாக அழைக்கப்பட்ட அமரர் வைத்திய கலாநிதி சங்கரப்பிள்ளை அம்பிகைபாகன் அவர்களின் 253ஆம் நாள் நினைவு தினமும், திருவுருவச்சிலை திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகள், முழங்காவில், அக்கராயன்குளம், பளை, தென்மராட்சி பிரதேச மக்களின் பங்களிப்புடன் சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக நேற்று நடைபெற்றுள்ளது.

வைத்தியர் சி.குமரவேள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்தியர் த.குகதாசன், அமரர் வைத்திய கலாநிதி சங்கரப்பிள்ளை அம்பிகைபாகனின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.