ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்

Report Print Thayalan Thayalan in ஆன்மீகம்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா இலட்சக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வற்றாப்பளை பொங்கல் விழாவானது, பொங்கலுக்கு ஏழு நாட்கள் இருக்கும்போது கடல் நீரிலிருந்து தீர்த்தம் எடுத்து தீபமேற்றும் பாரம்பரியத்துடனேயே நடைபெறும்.

அந்தவகையில், இந்த முறையும் நந்திக் கடலிலிருந்து முள்ளிவளையிலுள்ள காட்டு விநாயகர் ஆலயத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபமேற்றப்பட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இறுதி நாளான நேற்று கண்ணகி அம்மனுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் பொங்கி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு பால் காவடி, தூக்குக் காவடி, கற்பூரச்சட்டி ஏந்தல், பாற்செம்பு ஏந்தல் என பல நேர்த்தக்கடன்களும் நிறைவேற்றப்பட்டன.

இந் நிகழ்வில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்த சுமார் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.