அதிரடிப் படையினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு

Report Print Dias Dias in இலங்கை

நீர்கொழும்பு - குரண பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிரடிப் படையினர் பயணித்த ஜீப் வண்டி குரண பிரதேசத்தைக் கடந்து செல்ல முற்பட்ட நிலையில் வான் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்கள் அதிரடிப்படை வாகனம் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இன்று மாலை ஐந்தரை மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட குழுவில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான காரணங்கள் இது வரையில் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் குறித்த பகுதியில் அந்தப் பகுதியில் பொலிஸாரும், அதிரடிப் படையினரும் தற்போது குவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.