யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்! சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

Report Print Thayalan Thayalan in இலங்கை

யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் வீடு ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்றிரவு 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலின்போது வீட்டின் படுக்கை அறைக்கு அருகில் மூன்று குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன.

இந்தச் சம்பவத்தால் வீட்டிலிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இதில் சம்மந்தப்பட்ட நபரை வீட்டின் உரிமையாளர் அடையாளம் காட்டியுள்ளார்.

இவர் அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டுக்குழுக்களை சேர்ந்தவர் என்றும், இவருடைய உந்துருளி கோப்பாய் பொலிஸாரால் பறிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.