யாழ் பொன்னாலை வரதராஜாப் பெருமாள் தேர்த் திருவிழா

Report Print Dias Dias in இலங்கை

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜாப்பெருமாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பல்லாயிரம் பக்த அடியார்கள் புடைசூழ ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராய் மாயோன் எனப்படும் எம்பெருமான் அலங்காரத் தேர் ஏறி திருவீதி உலா வந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையினைத் தொடர்ந்து 11.30 மணியளவில் வரதராஜப்பெருமாள் வண்ணத்தேர் ஏறி வந்தார்.

இதேவேளை நேற்றைய தினம் வேட்டைத்திருவிழா இடம்பெற்றிருப்பதுடன் நாளைய தினம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தத்திருவிழா ஈழத்தின் புகழ்பெற்ற புனித தீர்த்தக்கரையாம் திருவடி நிலை கடற்கரையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பொன்னாலை வரதராஜாப் பெருமாள் ஆலயம் மாவீரன் வெடியரசன் காலத்திலிருந்தே புகழ்பெற்ற திருத்தலம் என அழைக்கப்படுகிறது.

மாவீரன் வெடியரசனின் தம்பியான வீரநாராஜணன், பொன்னாலை உள்ளிட்ட இன்றைய தொல்புரம் பகுதியை இராசதானியாக்கி அரசாண்டான் என்பதுடன் இந்த ஆலயத்திற்கு மாவீரன் வெடியரசன் ஏழு வீதிகளை அமைத்தானென்றும் வரலாறுகள் கூறுகின்றன.

யுத்த காலத்தில் ஸ்ரீலங்கா கடற்படையால் இந்த ஆலயம் முற்று முழுதாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

advertisement