கூட்டமைப்பிற்குள் ஆசனம் கிடைக்காத சிலர் கூட்டமைப்பை பிளவுபடுத்த முயற்சி

Report Print Dias Dias in இலங்கை
கூட்டமைப்பிற்குள் ஆசனம் கிடைக்காத சிலர் கூட்டமைப்பை பிளவுபடுத்த முயற்சி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஆசனம் கிடைக்காத சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்த சிலர் முயற்சிப்பதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் சி.துரைராஜசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறான சிலர் மக்கள் போராட்டங்கள் இடம்பெறும் இடங்களில் தம்மை பிரபல்யப்படுத்துவதற்காக முன் நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - வந்தாறுமூலை பலாச்சேலை வீதி செப்பனிடும் பணியை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.