2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணை

Report Print Nivetha in அறிக்கை

இந்த வருடத்துக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணையை இன்றைய தினம் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

  • க.பொ.த உயர் தரப் பரீட்சை

க.பொ.த உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

  • 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில்

5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

  • க.பொ. த சாதாரண தர பரீட்சை

க.பொ. த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments