அரிசிகளுக்கான அதியுட்ச விலை இன்று நள்ளிரவு முதல் மாற்றம்

Report Print Ajith Ajith in அறிக்கை
advertisement

இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதியுட்ச விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.

வறட்சிக் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இறக்குமதி நாடு 72.00 ரூபாவுக்கும் உள்நாட்டு நாடு 80.00 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், இறக்குமதி பச்சை அரிசி 70.00 ரூபாவாகவும் உள்நாட்டு பச்சை அரிசி 78.00 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இறக்குமதி கீரி சம்பா 80.00 ரூபாவாகவும் உள்நாட்டு கீரி சம்பா 90.00 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக கைத்தொழில் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

advertisement

Comments