அம்மன் ஆலய பங்குனித் திங்கள் உற்சவம் ஆரம்பம்: தமிழ்க் கலாச்சார உடைகளுடன் வருகை தருமாறு வேண்டுகோள்

Report Print Thamilin Tholan in அறிக்கை

பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய துர்முகி வருட பங்குனித் திங்கள் உற்சவம் நாளை அதிகாலை 05.30 மணிக்கு உஷாக் காலப் பூஜையுடன் ஆரம்பமாகவுள்ளது.

ஆலய உற்சவ காலங்களில் அடியவர்கள் தமிழ்க் கலாச்சார உடைகளுடன் ஆலயத்திற்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்கு வாரங்களும் திங்கட்கிழமைகளில் இடம்பெறவுள்ள உற்சவத்தில் ,காலைத் திருவிழா காலை 09 மணிக்கும், மாலைத் திருவிழா பிற்பகல் 06 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

உற்சவ காலங்களில் ஆறு காலப் பூசைகளுடன் விசேட அபிஷேக பூசைகள், பொங்கல் வழிபாடு, அம்பாள் உள் வீதி, வெளிவீதி வலம் வரும் திருக் காட்சி என்பன இடம்பெறவுள்ளது.

இதேவேளை, காலை 05 மணி முதல் இரவு 09 மணி வரை அடியவர்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுமாறும் ஆலய தர்மகர்த்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments