யாழில் இரவு வேளையில் மீண்டும் வாள் வெட்டு! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அட்டகாசம்

Report Print Shalini in அறிக்கை
advertisement

யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறையில் குடும்பத்தலைவர் ஒருவர் மீது கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தி அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் அல்வாய் மகாத்மா வீதியில் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதில் அல்வாய் மகாத்மா வீதியைச் சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க கு. கந்தசாமி என்ற நபரே பாதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த நபர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வீட்டிற்குள் இருந்த குறித்த நபரை வெளியே அழைத்து அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

advertisement

Comments