சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்திய பொலிஸார் மாரடைப்பால் உயிரிழப்பு

Report Print Steephen Steephen in அறிக்கை

சிலாபம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் கொரயாவத்தை பகுதியை வசிப்படமாக கொண்ட 55 வயதான தேமிய மெண்டிஸ் என்ற பொலிஸ் பொறுப்பதிகாரியே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் இரண்டு பொலிஸ் அதிகாரிகள், ஆயுர்வேத மருத்துவரான பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இரண்டு பேரை பின் தொடர்ந்து சென்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைது செய்தனர்.

பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சந்தேகநபர்களிடம் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

Comments