ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை : கணவருக்கும் அயலவருக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Shalini in அறிக்கை
advertisement

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஹம்சிகாவின் கணவர் மற்றும் அயல் வீட்டிலுள்ளவரின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதன்போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது ஹம்சிகாவின் கணவரும் அயலவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

மரபணு பரிசோதனைக்காக அவர்கள் இருவரின் இரத்தமாதிரிகள் எடுப்பதற்கு ஊர்காவற்துறை பொலிஸார் மன்றில் அனுமதி கோரினர்.

குறித்த பரிசோதனைக்கு இவர்கள் சம்மதித்ததை அடுத்து நாளை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இரத்த மாதிரிகளை வழங்குமாறு நீதிவான் கட்டளையிட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் ஒத்திவைத்துள்ளார்.

advertisement

Comments