ஐ.தே.கட்சியின் மாகாண சபை உறுப்பினர் கைது

Report Print Steephen Steephen in அறிக்கை

கண்டி இஸ்லாமிய சமய குழுவின் பிரதான அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜே.ஏ.எம்.லாபீர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி கண்டி ஜின்னா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது சந்தேக நபரான மாகாண சபை உறுப்பினர் உட்பட சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த கண்டி இஸ்லாமிய சமய குழுவின் அதிகாரி கண்டி போதான வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Comments