இலங்கையர்களுக்கு ஓர் செய்தி! ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

Report Print Ramya in அறிக்கை
advertisement

ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்களை வெளியிடுவது குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான ஆரம்ப படிமுறைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

இதன் மூலம் இணையத்தின் ஊடாக கடவுச் சீட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், இதற்கான கட்டணத்தை கடன் அட்டை மூலம் செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருட இறுதிக்குள் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

advertisement

Comments