பொலன்னறுவை மாவட்ட வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பு போராட்டம்

Report Print Ajith Ajith in அறிக்கை

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொலன்னறுவை மாவட்ட வைத்தியர்கள் இன்று போராட்டத்தை நடத்துகின்றனர்.

அந்த சங்கத்தின் இணை செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

இன்று காலை எட்டு மணி முதல் இந்த சேவை புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மாவட்ட ரீதியாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments