தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம்

Report Print Ajith Ajith in அறிக்கை

அத்துமீறி நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு முன்னர் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பிரபல ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது 151 தமிழக மீனவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் தரப்பில் தொடர்ச்சியாக மத்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

இதற்கு முன்னதாக படகுகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாது என பல்வேறு சந்தர்ப்பங்களில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அரமவீர திட்டவட்டமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments